பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ஆர்சிபி? டாஸ் வென்ற டெல்லி பேட்டிங்!

By Rsiva kumar  |  First Published Mar 10, 2024, 7:29 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.


மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடக்கும் 17ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியானது 3 மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி, திஷா கசாட், ஷ்ரத்தா போகர்கார், ஆஷா ஷோபனா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி டிவைன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), திஷா கசாட், ஜார்ஜியா வார்ஹாம், ஷோபி மோலினெக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கார், ரேணுகா தாகூர் சிங்.

டெல்லி கேபிடல்ஸ்:

மெக் லேனிங் (கேப்டன்) ஷஃபாலி வர்மா, ஆலீஷ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசன்னே கேப், ஜேஸ் ஜோனசென், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, ராதா யாதவ், டைட்டஸ் சாது.

click me!