டெல்லி அணியில் அஷ்வினுக்கு பதில் இஷாந்த் சர்மா! ஆர்சிபி அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. கோலி&கோ முதலில் பேட்டிங்

By karthikeyan VFirst Published Apr 27, 2021, 7:13 PM IST
Highlights

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், ஆர்சிபியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் நடக்கும் முதலிடத்தை தீர்மானிக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட், ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அஷ்வினுக்கு பதிலாக சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், இஷாந்த் சர்மா, அமித் மிஷ்ரா.

ஆர்சிபி அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேனியல் கிறிஸ்டியனுக்கு பதிலாக இடது கை ஃபாஸ்ட் பவுலர் டேனியல் சாம்ஸ் ஆடுகிறார். ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனிக்கு பதிலாக கூடுதல் பேட்ஸ்மேனாக ரஜாத் பட்டிதர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரஜாத் பட்டிதர், மேக்ஸ்வெல், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் சாம்ஸ், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
 

click me!