RCBW vs DC: ஆர்சிபிக்கு ஆட்டம் காட்டிய ஜெமிமா அண்ட் கேப்ஸி – 181 ரன்கள் குவித்த டெல்லி கேபிடல்ஸ்!

By Rsiva kumar  |  First Published Mar 10, 2024, 9:55 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது.


மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தற்போது நடைபெற்று வரும் 17ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியில் மெக் லேனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், ஷஃபாலி வர்மா 23 ரன்களில் ஆட்டமிழக்க, மெக் லேனிங் 29 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலீஸ் கேப்ஸி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

Tap to resize

Latest Videos

இதில், ரோட்ரிக்ஸ் 58 ரன்களில் நடையை கட்ட, கேப்ஸி 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆஷா ஷோபனா ஒரு விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்து வருகிறது.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி டிவைன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), திஷா கசாட், ஜார்ஜியா வார்ஹாம், ஷோபி மோலினெக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கார், ரேணுகா தாகூர் சிங்.

டெல்லி கேபிடல்ஸ்:

மெக் லேனிங் (கேப்டன்) ஷஃபாலி வர்மா, ஆலீஷ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசன்னே கேப், ஜேஸ் ஜோனசென், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, ராதா யாதவ், டைட்டஸ் சாது.

click me!