IPL 2021 முதல் தகுதிச்சுற்று போட்டி: DC அணியில் சீனியர் வீரருக்கு இடம் இல்லை..! உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Oct 9, 2021, 8:27 PM IST
Highlights

சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. டெல்லி கேபிடள்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி, கேகேஆர் ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ள நிலையில், புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய 2 அணிகளும் நாளை துபாயில் நடக்கும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மோதுகின்றன.

இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறும். தோற்கும் அணி, எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணியுடன் மோதும். இந்த போட்டியில் வென்றால் நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறமுடியும் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் தான் ஆடும்.

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஆடிவரும் டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த போட்டிக்கான ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்யலாம்.

இதையும் படிங்க - IPL 2021 பாண்டிங்கிற்கு அவரு மேல இருந்த நம்பிக்கை போயிடுச்சு! அடுத்த மேட்ச்சுல அவரு ஆட வாய்ப்பே இல்ல - கம்பீர்

விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறிவரும் அஷ்வினுக்கு பதிலாக, மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட தயாராக இருக்கும்பட்சத்தில் அவரை சேர்க்கலாம். அதைத்தவிர வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. இந்த மாற்றமும் செய்வது உறுதியில்லை; வாய்ப்புதான் இருக்கிறது.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரிப்பால் படேல், மார்கஸ் ஸ்டோய்னிஸ்/ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

click me!