#DCvsRCB கழண்டுகொண்ட சீனியர் வீரர்.. கட்டாயத்தின் பேரில் டெல்லி அணியில் ஒரு மாற்றம்..!

Published : Apr 27, 2021, 02:28 PM IST
#DCvsRCB கழண்டுகொண்ட சீனியர் வீரர்.. கட்டாயத்தின் பேரில் டெல்லி அணியில் ஒரு மாற்றம்..!

சுருக்கம்

ஆர்சிபி அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்படும்.  

ஐபிஎல் 14வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 

அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியில் டெல்லி கேபிடள்ஸ் அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கும். டெல்லி அணியின் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின், தனது குடும்பத்துடன் இருக்க விரும்புவதாக கூறி ஐபிஎல்லில் இருந்து விலகிவிட்டதால், அவரது இடத்தில் இன்று லலித் யாதவ் ஆடுவார்.

அந்த ஒரு மாற்றத்தை தவிர டெல்லி அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், லலித் யாதவ், அக்ஸர் படேல், ககிசோ ரபாடா, ஆவேஷ் கான், அமித் மிஷ்ரா.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி