திருடப்பட்ட டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்களின் பேட், பேட் உள்ளிட்ட உபரகரணங்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்த 5 போட்டிகளில் விளையாடி டெல்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டியிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து, நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. எனினும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டிருந்தார். அதில், அவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ஒரு சில மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. எனினும், நன்றி என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த 15 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
IPL 2023: தோனிக்கு பதிலாக கான்வே விக்கெட் கீப்பராக களமிறங்க வாய்ப்பு!
பின்னர், ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் மணீஷ் பாண்டே மட்டுமே 50 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். என்னதான் ஜெயிக்க வேண்டிய போட்டியாக இருந்தாலும் டெல்லி கேபிடல்ஸ் அணி இந்தப் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 20 ஆம் தேதி நாளை டெல்லியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையிலான 28ஆவது போட்டி நடக்கிறது. இதற்காக டெல்லி அணி வீரர்கள் பெங்களூருவிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
IPL 2023: ரோகித் சர்மா ஒரு வைரம்; அவரை விட சிறந்தவர் யாரும் இல்லை - ஹர்பஜன் சிங்!
வீரர்கள் டெல்லியில் தரையிறங்கிய போது அவர்களது உடமைகளிலிருந்து, 16 பேட், பேடு, கிளவ்ஸ் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகனது. விமான பயணத்திற்கு பிறகு ஒரு நாள் கழித்து சரக்குகளில் இருந்து கிட் பேக்குகள் வந்ததால், ஒரு நாள் கழித்து தான் தங்களது உபகரணங்கள் திருடப்பட்டிருப்பதாக வீரர்கள் அறிந்துள்ளனர்.
IPL 2023: எல்லாமே சென்னைக்கு சாதகம்: தோனியை மீறி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தால் ஜெயிக்க முடியுமா?
இதில், யாஷ் துல் தனது 5 பேட்டுகளை இழந்துள்ளார். டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தனது 3 பேட்டுகளை இழந்துள்ளார். மிட்செல் மார்ஷ் தனது 2 பேட்டுகளை இழந்துள்ளார். பில் சால்ட் தனது 3 பேட்டுகளை இழந்துள்ளார். இதன் மதிப்பி மில்லியன் கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது இதனுடைய மதிப்பு மொத்தமாக ரூ.10 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், டெல்லி வீரர்களின் உபகரணங்களை திருடிய திருடனை கண்டுபிடித்துள்ளனர். எனினும், திருடப்பட்ட உபகரணங்களை பத்திரமாக ஒப்படைத்துள்ளனர். ஆனால் திருடன் யார் என்பது குறித்து விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில், இறுதியாக குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ஆனால், ஒரு சில உபகரணங்கள் கிடைக்கவில்லை. எனினும் நன்றி என்று வார்னர் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Good news for Delhi Capitals: The stolen bats, Pads, gloves all have been found by the police. pic.twitter.com/3eeVNz0e0l
— Johns. (@CricCrazyJohns)