IPL Auction 2022: Cheap & Best-ஆக வார்னரை குறைவான தொகைக்கு தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்! செம பர்சேஸ்

Published : Feb 12, 2022, 01:19 PM ISTUpdated : Feb 12, 2022, 01:25 PM IST
IPL Auction 2022: Cheap & Best-ஆக வார்னரை குறைவான தொகைக்கு தட்டி தூக்கிய டெல்லி கேபிடள்ஸ்! செம பர்சேஸ்

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.6.25 கோடிக்கு டேவிட் வார்னரை டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலம் இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கி பெங்களூருவில் நடந்துவருகிறது. முதல் வீரராக ஏலம் விடப்பட்ட ஷிகர் தவானை ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. அஷ்வினை ரூ.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது.

ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், டிரெண்ட் போல்ட்டை ரூ.8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. ஃபாஃப் டுப்ளெசிஸை ரூ.7 கோடிக்கு ஆர்சிபி அணியும், விக்கெட் கீப்பர் - டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக்கை ரூ.6.75 கோடிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன.

புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கேகேஆர் அணி, ரூ.12.25 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயரை எடுத்தது. எனவே அவரைத்தான் கேப்டனாக நியமிக்கும்.

ரூ.2 கோடியை அடிப்படை விலையாக கொண்ட ஜாம்பவான் கிரிக்கெட்டரும் அதிரடி பேட்ஸ்மேனும், சன்ரைசர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னரை எடுக்க ஆரம்பத்தில் சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டியது. ஆனால் உடனடியாக விலகிக்கொண்டது. தவான், ஷ்ரேயாஸ், அஷ்வின், ரபாடா என பெரிய வீரர்களை விடுவித்து, ஏலத்திலும் எடுக்காமல் இழந்த டெல்லி அணி, ரூ.6.25 கோடி என்ற குறைவான தொகைக்கு டேவிட் வார்னரை தட்டி தூக்கியது.

அதிரடி இடது கை தொடக்க வீரரான வார்னர், வலது கை பேட்ஸ்மேன் பிரித்வி ஷாவுடன் இணைந்து தொடக்க வீரராக ஆடுவார். கேப்டன்சி அனுபவம் கொண்ட வார்னர் டெல்லி அணிக்கு பயனுள்ள வீரராக இருப்பார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!