
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்திற்கு முன்பாக டெல்லி கேபிடள்ஸ் அணி, ரிஷப் பண்ட், அக்ஸர் படேல், பிரித்வி ஷா மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய 4 வீரர்களை தக்கவைத்தது.
மெகா ஏலத்தில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ரோவ்மன் பவல், டிம் சேஃபெர்ட், லுங்கி இங்கிடி ஆகிய வெளிநாட்டு வீரர்களையும், ஷர்துல் தாகூர், சர்ஃபராஸ் கான், குல்தீப் யாதவ், கமலேஷ் நாகர்கோடி, சேத்தன் சக்காரியா, மந்தீப் சிங், லலித் யாதவ், யஷ் துல், கலீல் அகமது ஆகிய இந்திய வீரர்களையும் ஏலத்தில் எடுத்தது.
டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவனை பார்ப்போம். பிரித்வி ஷாவுடன் டேவிட் வார்னர் தொடக்க வீரராக இறங்குவார். மிட்செல் மார்ஷ் 3ம் வரிசையிலும், ரிஷப் பண்ட் 4ம் வரிசையிலும் ஆடுவார்கள். 5ம் வரிசையில் சர்ஃபராஸ் கான் ஆடுவார். ஸ்பின்னர்களாக ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக லலித் யாதவ் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் ஆடுவார்கள். ஃபாஸ்ட்பவுலிங் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூருடன் ஃபாஸ்ட் பவுலர்களாக அன்ரிக் நோர்க்யா, சேத்தன் சக்காரியா மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் ஆகியோரும் ஆடுவார்கள்.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், சேத்தன் சக்காரியா, அன்ரிக் நோர்க்யா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஷர்துல் தாகூர், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், சர்ஃபராஸ் கான், கமலேஷ் நாகர்கோடி, மந்தீப் சிங், கலீல் அகமது, லுங்கி இங்கிடி, சேத்தன் சக்காரியா, யஷ் துல், லலித் யாதவ், ரோவ்மன் பவல், டிம் சேஃபெர்ட், அன்ரிக் நோர்க்யா.