DC vs RCBW: கடைசி வரை போராடிய ரிச்சா கோஷ் – ஒரு ரன்னில் த்ரில் வெற்றியை ருசித்த டெல்லி கேபிடல்ஸ்!

Published : Mar 11, 2024, 06:55 AM IST
DC vs RCBW: கடைசி வரை போராடிய ரிச்சா கோஷ் – ஒரு ரன்னில் த்ரில் வெற்றியை ருசித்த டெல்லி கேபிடல்ஸ்!

சுருக்கம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடந்த 17ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியில் மெக் லேனிங் மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். இதில், ஷஃபாலி வர்மா 23 ரன்களில் ஆட்டமிழக்க, மெக் லேனிங் 29 ரன்களில் நடையை கட்டினார். அடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் அலீஸ் கேப்ஸி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

இதில், ரோட்ரிக்ஸ் 58 ரன்களில் நடையை கட்ட, கேப்ஸி 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க கடைசியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆஷா ஷோபனா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷோபி மோலினெக்ஸ் மற்றும் எல்லீஸ் பெர்ரி இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். எனினும், மோலினெக்ஸ் 33 ரன்களில் வெளியேற, எல்லீஸ் பெர்ரி 49 ரன்களில் நடையை கட்டினார்.

அதன் பிறகு ஷோஃபி டிவைன் மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், ஷோஃபி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜார்ஜியா வார்ஹாம் களமிறங்கினார். கடைசி ஓவருக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் ரிச்சா கோஷ் 2 சிக்சர், 2 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்னுக்கு ஓடிய போது ரன் அவுட்டானார். அவர், 29 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் எடுத்து ரன் அவுட் செய்யப்பட்டார்.

இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக விளையடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி டிவைன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), திஷா கசாட், ஜார்ஜியா வார்ஹாம், ஷோபி மோலினெக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கார், ரேணுகா தாகூர் சிங்.

டெல்லி கேபிடல்ஸ்:

மெக் லேனிங் (கேப்டன்) ஷஃபாலி வர்மா, ஆலீஷ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசன்னே கேப், ஜேஸ் ஜோனசென், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, ராதா யாதவ், டைட்டஸ் சாது.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!