DC vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் சுந்தருக்கு பதில் இவரா? இல்ல அவரா..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 05, 2022, 02:51 PM IST
DC vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் சுந்தருக்கு பதில் இவரா? இல்ல அவரா..? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. 

சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை ஆடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றிகளையும், டெல்லி கேபிடள்ஸ் அணி ஆடிய 9 போட்டிகளில் 4 வெற்றிகளையும் பெற்றுள்ள நிலையில், இந்த போட்டி பிளே ஆஃபிற்கு முன்னேற போராடும் இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி.

இன்று மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இரு அணிகளுமே வெற்றி வேட்கையுடன் களமிறங்குகின்றன. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். டெல்லி கேபிடள்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. சன்ரைசர்ஸ் அணியில் காயமடைந்த வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஜெகதீஷா சுஜித் - ஷ்ரேயாஸ் கோபால் ஆகிய இருவரில் ஒருவர் இறங்குவார்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், ஜெகதீஷா சுஜித்/ஷ்ரேயாஸ் கோபால், புவனேஷ்வர் குமார், மார்கோ யான்சென், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!