
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் பஞ்சாப் கிங்ஸும் மோதுகின்றன.
இந்த போட்டி புனேவில் நடக்க வேண்டியது. ஆனால் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஃபிசியோ பாட்ரிக், ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மற்றும் ஒரு சப்போர்ட் ஸ்டாஃப் ஆகிய மூவருக்கு கொரோனா உறுதியானதால், டெல்லி அணி மும்பையிலிருந்து புனேவிற்கு பயணிப்பது ரிஸ்க் என்பதால் இந்த போட்டி மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த போட்டிக்கான டெல்லி அணியில் ஒரு மற்றம் செய்யப்படும். ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் கொரோனா காரணமாக ஆடமாட்டார் என்பதால், அவருக்கு பதிலாக டிம் சேஃபெர்ட் - அன்ரிக் நோர்க்யா ஆகிய இருவரில் சேர்க்கப்படலாம்.
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், டிம் சேஃபெர்ட்/அன்ரிக் நோர்க்யா, ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயன்க் அகர்வால் காயம் காரணமாக கடந்த போட்டியில் ஆடாத நிலையில் இன்றைய போட்டியிலும் அவர் ஆடமாட்டார். அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குவார்கள்.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரான் சிங், ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.