விசாகப்பட்டினம் யாருக்கு சாதகம்? கேகேஆர் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

By Rsiva kumar  |  First Published Apr 3, 2024, 5:07 PM IST

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.


ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இன்று நடக்கும் 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த சீசனில் இதுவரையில் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் இரு அணிகளும் இதற்கு முன்னதாக 32 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 போட்டியிலும், டெல்லி கேபிடல்ஸ் 15 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை.

விசாகப்பட்டினம் மைதானத்தில் இதுவரையில் 14 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில், 7 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றிருக்கிறது. இதே போன்று 2ஆவது பேட்டிங் செய்த அணியும் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு டெல்லி விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

கொல்கத்தா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. பேட்டிங்கில் பிலிப் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், ரிங்கு சிங் ஆகியோர் இருக்கின்றனர். இதே போன்று பவுலிங்கில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரஸல், ஹர்ஷித் ராணா, அனுகுல் ராய் ஆகியோர் இருக்கின்றனர்.

மேலும், டெல்லி கேபிடல்ஸ் அணியில் பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல் ஆகியோர் இருக்கின்றனர். பவுலிங்கில் இஷாந்த் சர்மா, முகேஷ் குமார், கலீல் அகமது, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, அக்‌ஷர் படேல் ஆகியோர் பலம் வாய்ந்த பிளேயர்ஸாக கருதப்படுகின்றனர்.

click me!