DC vs KKR: டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! கேகேஆரில் ஒரு மாற்றம்.. இரு அணிகளின் உத்தேச ஆடும் 11

Published : Apr 28, 2022, 02:32 PM IST
DC vs KKR: டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 அதிரடி மாற்றங்கள்! கேகேஆரில் ஒரு மாற்றம்.. இரு அணிகளின் உத்தேச ஆடும் 11

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கேகேஆரும் மோதுகின்றன. மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. தோல்விகளால் துவண்டு போயிருக்கும் இரு அணிகளுமே வெற்றி வேட்கையில் இன்று களமிறங்குகின்றன.

இந்த போட்டிக்கான டெல்லி கேபிடள்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மிட்செல் மார்ஷ்  கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டதால் இந்த போட்டியில் ஆடுவார் என்பதால் சர்ஃபராஸ் கான் நீக்கப்படுவார். அதேபோல முஸ்தாஃபிசுர் ரஹ்மானுக்கு பதிலாக 150 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர் அன்ரிக் நோர்க்யா சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்/அன்ரிக் நோர்க்யா, கலீல் அகமது.

கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம். டிம் சௌதிக்கு பதிலாக பாட் கம்மின்ஸ் சேர்க்கப்படலாம்.

உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், சாம் பில்லிங்ஸ் (விக்கேட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், டிம் சௌதி/பாட் கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Ireland: அயர்லாந்து தொடர்: இளம் இந்திய அணியிடம் எதிர்பார்க்கப்படும் 5 விஷயங்கள்!
ICC Rankings: ஐசிசி தரவரிசையில் மாஸ் காட்டிய கில்... பும்ராவின் No.1 இடத்துக்கு வந்த நியூசி. வீரர்!