#IPL2021 டெல்லி கேபிடள்ஸுக்கு மற்றுமொரு மரண அடி..! அணியின் ஆல்ரவுண்டருக்கு கொரோனா பாசிட்டிவ்

By karthikeyan VFirst Published Apr 3, 2021, 3:31 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசன் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு அடுத்தடுத்த அடிகள் விழுந்துகொண்டிருக்கின்றன. 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அதற்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதால், ஐபிஎல் 14வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார் டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். அதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாதது அந்த அணிக்கு பெரும் பாதிப்பாகவே அமையும்.

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அக்ஸர் படேலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அக்ஸர் படேல் குவாரண்டினில் இருந்துவந்தார். ஐபிஎல்லில் ஆடும் வீரர்கள் அனைவருமே குவாரண்டினில் இருக்கும் நிலையில், அக்ஸர் படேலும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தார்.

இந்நிலையில், அக்ஸர் படேலுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. அக்ஸர் படேலுக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால், பாசிட்டிவ் என்ற வந்த நாளிலிருந்து அல்லது அவருக்கு அறிகுறிகள் தென்பட்ட நாளிலிருந்து 10 நாட்கள் அவர் தனிமையில் இருக்க வேண்டும். அணி மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் உள்ளார் அக்ஸர் படேல்.

அதனால் அவர் 10 நாட்களுக்கு பயிற்சியிலும் ஈடுபடமுடியாது. இதற்கிடையே வரும் 10ம் தேதி டெல்லி கேபிடள்ஸ் அணி அதன் முதல் போட்டியில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் அக்ஸர் படேல் ஆடமாட்டார். அக்ஸர் படேலுக்கு கொரோனா உறுதியாகியிருப்பது டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். 
 

click me!