#IPL2021 ராஜஸ்தான் ராயல்ஸ் ரொம்ப ஸ்மார்ட்டான டீம்..! அப்படி என்ன பண்ணாங்கனு பாருங்க

By karthikeyan VFirst Published Sep 18, 2021, 8:37 PM IST
Highlights

ராஜஸ்தான் ராயல்ஸ் ரொம்ப ஸ்மார்ட்டான அணி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா புகழாரம் சூட்டியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 லீக் போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் நாளை(செப்டம்பர் 19) முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன. 

அதற்காக ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்ட ஐபிஎல் அணிகள் அங்கு தீவிரமாக தயாராகிவருகின்றன. வெளிநாட்டு வீரர்கள் சிலர் ஆடாததால், ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகள் அந்த அணிகளுக்கு கடும் சவாலாக இருக்கும். வெளிநாட்டு வீரர்கள் விலகியதால் கடும் பாதிப்பை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய 3 இங்கிலாந்து வீரர்களையே அதிகமாக சார்ந்திருந்த நிலையில், பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பட்லர் ஆகிய மூவருமே ஐபிஎல் 14வது சீசனின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகினர். ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஆண்ட்ரூ டையும் விலகினார். 

அந்த இழப்புகளை ஈடுகட்ட புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. நியூசிலாந்து விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான க்ளென் ஃபிலிப்ஸையும், அவரை தொடர்ந்து, உலகின் நம்பர் 1 டி20 பவுலரான தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் ஷாம்ஸியை ஒப்பந்தம் செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

அதைத்தொடர்ந்துஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவருக்கும் மாற்று வீரர்களாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான எவின் லூயிஸ் மற்றும் ஒஷேன் தாமஸ் ஆகிய இருவரையும் ஒப்பந்தம் செய்தது  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. எவின் லூயிஸ் அண்மையில் நடந்து முடிந்த கரீபியன் பிரீமியர் லீக்கில் அருமையாக ஆடினார். கரீபியன் பிரீமியர் லீக்கில் நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்ததன் அடிப்படையில் எவின் லூயிஸை ஒப்பந்தம் செய்தது.

தங்கள் அணியிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்களுக்கு பதிலாக, தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் சிறந்த வீரர்களை தேர்வு செய்த ராஜஸ்தான் அணி ஸ்மார்ட்டான அணி என்று தீப்தாஸ் குப்தா புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தீப்தாஸ் குப்தா, ஆர்ச்சர், பட்லர், ஸ்டோக்ஸ், ஆண்ட்ரூ டை ஆகிய நால்வரும் விலகினர். அவர்கள் நால்வருமே மேட்ச் வின்னர்கள். ஆனால் அவர்கள் விலகியபோதிலும், அவர்களுக்கு மாற்றாக தற்போதைய சூழலில் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் அணி. எவின் லூயிஸ் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஒரு சதம் உட்பட நன்றாக ஸ்கோர் செய்த நிலையில், அவரை அணியில் எடுத்துள்ளனர். க்ளென் ஃபிலிப்ஸும் நல்ல ஃபார்மில் ஆடிவருகிறார். உலகின் நம்பர் 1 டி20 பவுலரான ஷாம்ஸியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் மேட்ச் வின்னர்களை இழந்துவிட்டாலும், மாற்று வீரர்களை தேர்வு செய்வதில் ஸ்மார்ட்டாக செயல்பட்டுள்ளது என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
 

click me!