டிவில்லியர்ஸ் தேர்வு செய்த ஆல்டைம் ஐபிஎல் லெவன்..! 2 பெருந்தலைகளுக்கு அணியில் இடமில்லை

By karthikeyan VFirst Published Apr 2, 2021, 3:50 PM IST
Highlights

ஆர்சிபி அணியின் ஜாம்பவான் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், ஐபிஎல்லில் ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 13 சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 5 முறையும், சிஎஸ்கே அணி 3 முறையும், கேகேஆர் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.

ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த 3 அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஏமாற்றத்துடனேயே ஒவ்வொரு சீசனையும் முடிக்கின்றன.

விராட் கோலி, டிவில்லியர்ஸ் என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இருந்தும் இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வெல்லாததுதான் பெரும் சோகம். இந்த சீசனிலும் ஐபிஎல் டைட்டிலை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி களம் காண்கிறது. ஆர்சிபி அணி முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும் நிலையில், ஆர்சிபி அணியுடன் பயிற்சி முகாமில் இணைந்துவிட்ட ஏபி டிவில்லியர்ஸ், ஆல்டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார்.

தனது ஆல்டைம் ஐபிஎல் லெவனின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னர்களான வீரேந்திர சேவாக் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் டிவில்லியர்ஸ். 3ம் வரிசையில் கோலியையும், 4ம் வரிசையில் ஸ்மித், வில்லியம்சன் மற்றும் ஏபிடி ஆகிய எங்கள் மூவரில் ஒருவர் என்று தெரிவித்த டிவில்லியர்ஸ், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை தனது அணியில் தேர்வு செய்தார்.

கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக தோனியையும், ஸ்பின்னர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் ரபாடா ஆகிய மூவரையும் தேர்வு செய்தார் டிவில்லியர்ஸ்.

ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் லசித் மலிங்கா ஆகிய இருவரையும் டிவில்லியர்ஸ் தனது அணியில் எடுக்கவில்லை. அதேபோல கிறிஸ் கெய்லையும் சேர்க்கவில்லை.

டிவில்லியர்ஸின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

சேவாக், ரோஹித், கோலி, வில்லியம்சன்/ஸ்மித்/ஏபிடி, ஸ்டோக்ஸ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், பும்ரா, ரபாடா.
 

click me!