
ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. 9ம் தேதி சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் 5 முறை சாம்பியனும் நடப்பு சாம்பியனுமான மும்பை இந்தியன்ஸும், ஆர்சிபியும் மோதுகின்றன.
ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்று வீழ்த்த கடினமான மற்றும் வலுவான அணியாக திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ். மும்பை இந்தியன்ஸ் அணி நன்றாக செட்டில் ஆன, மிகச்சிறந்த 11 வீரர்களை பெற்று நிரந்தர ஆடும் லெவனுடன் வலுவாக திகழ்கிறது. எனவே அந்த அணிக்கு மற்ற அணிகளை போல ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது, யாரை விடுவிப்பது என்ற சந்தேகமெல்லாம் கிடையவே கிடையாது.
இந்நிலையில், ஐபிஎல் 14வது சீசனில் ஆடுவதற்கான மும்பை இந்தியன்ஸின் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.
அதன்படி, ரோஹித், குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு, க்ருணல் பாண்டியா என்ற பேட்டிங் ஆர்டரை அப்படியே தேர்வு செய்துள்ளார். குருணல் பாண்டியாவுடன் 2வது ஸ்பின்னராக ராகுல் சாஹரை தேர்வு செய்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்யவில்லை என்றாலும், அவர் தான் 2வது ஸ்பின்னர்.
ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, டிரெண்ட் போல்ட் மற்றும் நேதன் குல்ட்டர்நைல் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:
ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, பொல்லார்டு, நேதன் குல்ட்டர்நைல், ராகுல் சாஹர், பும்ரா, டிரெண்ட் போல்ட்.