தன்னம்பிக்கையுடனும், பெருமையுடனும் விளையாட வேண்டும்: டேவிட் வார்னர்!

By Rsiva kumar  |  First Published May 14, 2023, 2:04 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில், இப்படியெல்லாம் விளையாடினால் ஜெயிக்கவே முடியாது என்று மன வேதனையுடன் பேசியுள்ளார்.


பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 59ஆவது போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் ஆடி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி 6.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் குவித்தது.

பிளே ஆஃப் வாய்ப்பு பெறுமா ராஜஸ்தான்? டாப் 4 யாருக்கு?

Latest Videos

அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் வார்னர் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 10.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விக்கெட்டுகள் விழவே இறுதியாக 20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்து 31 ரன்களில் தோல்வியை தழுவியது. அதோடு, 12 போட்டிகளில் 8 தோல்வியுடன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது.

பிளே ஆஃப் வாய்ப்பு போச்சு: முதல் அணியாக வெளியேறிய டெல்லி கேபிடல்ஸ்!

தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வார்னர் கூறியிப்பதாவது: குறிப்பிட்ட ஸ்கோர் எடுப்பதற்குள் பஞ்சாப் அணியை தடுத்து நிறுத்துவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர்கள் அதிக ரன்கள் எடுத்துவிட்டார்கள். அதிலேயும் பிராப்சிம்ரன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். நாங்கள் சில வாய்ப்புகளையும் கோட்டைவிட்டோம். பேட்டிங்கில் நல்ல தொடக்கம் கொடுத்தோம்.

ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங் சரியில்லாம போச்சு: பஞ்சாப்பிடம் சரண்டரான டெல்லி!

ஆனால், அதன்பிறகு 30 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழப்பதெல்லாம் தோல்வியை கொடுக்கும். எப்போதும் தன்னம்பிக்கையுடன், பெருமையுடன் விளையாட வேண்டும். களத்திற்கு வரும் போது சுந்தரமாக விளையாட வேண்டும். இது ஏமாற்றமான போட்டியாக அமைந்துவிட்டது. நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தும் நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். மிடில் ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழப்பதெல்லாம் தவறான ஒன்று. ஐபிஎல் தொடரில் இப்படியெல்லாம் விளையாடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வேதனையுடன் பேசியுள்ளார். இன்னும் ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும், கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனும் மோத உள்ளது.

ஹைதராபாத் பிளே ஆஃப் வாய்ப்பு எப்படி? GT, RCB, MI அணிகளை ஓட ஓட விரட்டினால் அமையுமா?

click me!