ENG vs IND 3வது டி20: டேவிட் மலான் காட்டடி அரைசதம்.. இந்திய அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

Published : Jul 10, 2022, 09:04 PM IST
ENG vs IND 3வது டி20: டேவிட் மலான் காட்டடி அரைசதம்.. இந்திய அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

சுருக்கம்

இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, டேவிட் மலானின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 215 ரன்களை குவித்து, 216 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், 3வது டி20 போட்டி இன்று டிரெண்ட்பிரிட்ஜில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலிரண்டு போட்டிகளிலும் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார் பட்லர். ஆனால் அந்த 2 போட்டிகளிலும் படுதோல்வியை தழுவியதால், இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய்.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், ஃபிலிப் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி ப்ரூக், மொயின் அலி, டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், ரீஸ் டாப்ளி, ரிச்சர்ட் க்ளீசன்.

முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் மந்தமாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 27 ரன் மட்டுமே அடித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஜோஸ் பட்லர் 9 பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

ஃபிலிப் சால்ட் வெறும் 8 ரன்னுக்கு நடையை கட்டினார். ஆனால் அடித்து ஆடி அரைசதம் அடித்த டேவிட் மலான் 39 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 29 பந்தில் 42 ரன்கள் அடித்தார். ஹாரி ப்ரூக் 9 பந்தில் 19 ரன்களும், கிறிஸ் ஜோர்டான் 3 பந்தில் 11 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 215 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 216 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வீரர்களுக்காக கண்கொத்தி பாம்பாய் காத்திருக்கும் அணிகள்.. அபுதாபியில் இன்று IPL மினி ஏலம்
IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!