#AUSvsIND காயத்தால் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட அதிரடி வீரர்..! இந்திய அணிக்கு அனுகூலம்

By karthikeyan VFirst Published Nov 30, 2020, 7:06 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டு அவருக்கு மாற்று வீரரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்றுவிட்டது. முதல் 2 போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் மிக மிகச்சிறப்பாக ஆடியது.

ஸ்மித் 2 போட்டிகளிலுமே சதமடிக்க, வார்னர் 2 போட்டிகளிலும் அரைசதம் அடித்தார். ஃபின்ச் முதல் போட்டியில் சதமும் 2வது போட்டியில் அரைசதமும் அடித்தார். மேக்ஸ்வெல் 2 போட்டிகளிலும் செம காட்டடி அடித்து, ஆஸ்திரேலிய அணி மெகா ஸ்கோரை அடிக்க உதவினார்.

ஆஸ்திரேலிய அணியின் அபாரமான பேட்டிங்கால் 374 மற்றும் 389 ஆகிய மெகா ஸ்கோர்களை 2 போட்டிகளிலும் அடித்து, இந்திய அணியை 2 அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2 போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் அளவிற்கு இந்திய அணி ஆடவில்லை.

2வது ஒருநாள் போட்டியின்போது ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், ஃபீல்டிங் செய்யும்போது இடுப்பு பகுதியில் காயமடைந்தார். அதனால் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் டேவிட் வார்னர். அவருக்கு பதிலாக டார்ஷி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். அதிரடி வீரரான வார்னர் டி20 போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு அனுகூலமான விஷயம்.

ஆஸ்திரேலிய டி20 அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), பாட் கம்மின்ஸ்(துணை கேப்டன்), சீன் அபாட், அஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், டார்ஷி ஷார்ட், ஆடம் ஸாம்பா.
 

click me!