இந்தியா மட்டும் ஆஸி.,யை வீழ்த்திட்டா ஒரு வருஷத்துக்கு கொண்டாடலாம்..! கிளார்க் ஏன் இப்படி சொல்றாருனு பாருங்க

By karthikeyan VFirst Published Nov 30, 2020, 6:09 PM IST
Highlights

இந்திய அணி ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் இம்முறை வீழ்த்திவிட்டால் அந்த வெற்றியை ஓராண்டுக்கு கொண்டாடலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
 

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என தொடரை வென்றுவிட்டது. ஒருநாள் தொடருக்கு பின்னர் டி20 தொடரும் கடைசியாக 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளது.

டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் கேப்டன் விராட் கோலி ஆடப்போவதில்லை. கோலி ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். கோலியின் இடத்தில் பேட்டிங் ஆடப்போவது யார்  என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. விராட் கோலி இல்லாமல் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவதும் கடினம். 

இந்நிலையில், விராட் கோலி இல்லாமல் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்திவிட்டால், அந்த வெற்றியை ஓராண்டுக்கு கொண்டாடலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள மைக்கேல் கிளார்க், விராட் கோலி 2 பக்கம் இருக்கிறது. கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அவர் இந்திய அணிக்கு மிக முக்கியம். கோலியின் பேட்டிங் ஆர்டரில் யார் ஆடப்போகிறார் என்பது பெரும் கேள்விக்குறி. கேஎல் ராகுல் திறமையான, அனுபவமான வீரர். ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே ஆடியிருக்கிறார். ஆனாலும் கோலியின் இடத்தை யாராலும் நிரப்பமுடியாது. 

கேப்டன்சியை பொறுத்தமட்டில் ரஹானே நல்ல கேப்டன் தான். வியூகங்கள், திட்டங்களை வகுப்பதில் ரஹானே மிகச்சிறந்த கேப்டன். இந்திய அணிக்கும் அவரது கேப்டன்சி நல்லது. விராட் கோலி இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திவிட்டால் அந்த வெற்றியை ஓராண்டுக்கு இந்திய அணி கொண்டாடலாம் என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். 

click me!