ஸ்ட்ரீட் கிரிக்கெட்டை விட மோசமான பந்தை வீசிய ஹஃபீஸ்.. விடாமல் விரட்டி சிக்ஸர் அடித்த David Warner..! வீடியோ

By karthikeyan VFirst Published Nov 12, 2021, 5:41 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் சீனியர் ஆல்ரவுண்டர் முகமது ஹஃபீஸ், ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் வீசுவதை விட மோசமான ஒரு டபுள் பவுன்ஸ் பந்தை வார்னருக்கு வீச, அதையும் விடாமல் வார்னர் விரட்டிச்சென்று சிக்ஸர் அடித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இறுதிப்போட்டி மட்டுமே இந்த தொடரில் எஞ்சியுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரும் 14ம் தேதி துபாயில் இறுதிப்போட்டி நடக்கிறது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியிருந்த நிலையில், இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் ஃபைனலுக்கு முன்னேறின. 

இதையும் படிங்க - பையன் செம டேலண்ட்.. டெக்னிக், தெளிவு, நிதானம் எல்லாமே அபாரம்..! இந்திய இளம் வீரரை விதந்தோதிய கவாஸ்கர்

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முகமது ரிஸ்வான் (52 பந்தில் 67 ரன்கள்)  மற்றும் ஃபகர் ஜமான் (32 பந்தில் 55 ரன்கள்) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்கள் மற்றும் பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங் (39) ஆகியவற்றால் 20 ஓவரில் 176 ரன்களை குவித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது. 

ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர் (49) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் (40) பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர மேத்யூ வேடின் காட்டடி பேட்டிங் (17 பந்தில் 41 ரன்கள்) ஆகியவற்றால் 19வது ஓவரிலேயே  177 ரன்கள் என்ற இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.

இதையும் படிங்க - எந்த தப்புமே செய்யாமல் டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட Hanuma Vihari.. நல்லா ஆடுனதுக்கு தண்டனையா இது?

இந்த போட்டியில் வார்னர் அடித்த ஒரு சிக்ஸர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது, முகமது ஹஃபீஸ் வீசிய 8வது ஓவரின் முதல் பந்து அவரது கையிலிருந்து வழுக்கிக்கொண்டு சென்றதால், இரண்டு முறை பிட்ச் ஆனதுடன் லெக் ஸ்டம்பை விட்டு வெகுதூரம் விலகி வெளியே சென்றது. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் வீசுவதைவிட மோசமான பந்தாக இருந்தாலும், அதையும் விடாமல் விரட்டிச்சென்று சிக்ஸர் அடித்தார் வார்னர். அதை வார்னர் அடிக்கவில்லை என்றால் டெட் பால் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பவுலரின் கையிலிருந்து வெளிவந்த பின்னர் அந்த பந்து எப்படி சென்றாலும், அதை அடிப்பது பேட்ஸ்மேன் அடிப்பது அவரது உரிமை. எனவே அந்தவகையில், வார்னரின் ஷாட்டுக்கு சிக்ஸர் கொடுக்கப்பட்டது. அந்த ஷாட்டை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
 

YOUTUBE THUMBNAIL MATERIAL.
🤝. pic.twitter.com/dVC0jPcBNs

— Johnny#Aus🇦🇺🦘 (@JohnnySar77)
click me!