#IPL2021 அந்த அணி தான் கோப்பையை வெல்லும்..! அடித்துக்கூறும் இங்கிலாந்து முன்னாள் வீரர்

By karthikeyan VFirst Published Sep 15, 2021, 6:30 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனில் எந்த அணி டைட்டிலை வெல்லும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர் கருத்து கூறியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனில் 29 போட்டிகள் நடந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன.

அதற்காக அமீரகம் சென்றுள்ள அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. ஏற்கனவே 5 முறை கோப்பையை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பிலும், 3 முறை டைட்டிலை வென்றுள்ள சிஎஸ்கே 4வது முறையாக வெல்லும் முனைப்பிலும் ஆடுகின்றன.

ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் ஆகிய அணிகள் வழக்கம்போலவே முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. கடந்த சீசனில் ஃபைனல் வரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்த டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனில் ரிஷப் பண்ட்டின் தலைமையில் ஆடுகிறது.

அனைத்து அணிகளுமே கோப்பையை வெல்லும் முனைப்பில் தான் களமிறங்குகின்றன. ஆனாலும் இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புள்ளது என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் கோவர், மும்பை இந்தியன்ஸ் அணி தான் எப்போதும் டைட்டிலை வெல்கிறது இல்லையா? ஒரு சீசனை எந்தமாதிரி தொடங்கினாலும் சரி, கடைசியில் டைட்டிலை வென்றுவிடுகிறது மும்பை இந்தியன்ஸ் என்று டேவிட் கோவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் ஸ்விங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், பும்ரா, போல்ட் போன்ற தரமான ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட  மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றிருப்பதாலும், பந்து நன்றாக பேட்டிற்கு வரும் அந்த கண்டிஷனில் ரோஹித், ஹர்திக் ஆகியோர் அசத்துவார்கள் என்பதாலும், ஐபிஎல் அமீரகத்தில் நடப்பது மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாக இருக்கும் என்று  கௌதம் கம்பீர் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!