டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இந்த 11 பேரை இறக்குங்க..! கம்பீர் அதிரடி

By karthikeyan VFirst Published Sep 15, 2021, 3:29 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் கௌதம் கம்பீர்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், இரு அணிகளும் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஐசிசி உலக கோப்பையில் இதுவரை இந்திய அணியை ஒருமுறை கூட பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. உலக கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி ஆடும் அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான இந்த மோசமான ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் டி20 உலக கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றிருக்கும் நிலையில், அந்த பிரிவில் முதல் போட்டியே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேதான் நடக்கிறது. வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியில் களமிறங்குவதற்கான இந்திய அணியின் ஆடும் லெவனை கௌதம் கம்பீர் தேர்வு செய்துள்ளார்.

கம்பீரின் தேர்வு

தொடக்க வீரர்கள் - ரோஹித் சர்மா, கேஎல் ராகுல்.
3ம் வரிசையில் கேப்டன் கோலி
4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ்
5ம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்

ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா

ஸ்பின்னர் - வருண் சக்கரவர்த்தி
சீனியர் ஸ்பின்னரான அஷ்வினையோ, ரிஸ்ட் ஸ்பின்னர் ராகுல் சாஹரையோ எடுக்காமல், தமிழகத்தை சேர்ந்த கத்துக்குட்டி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி மீது நம்பிக்கை வைத்து கம்பீர் அவரை தேர்வு செய்துள்ளார்.

ஃபாஸ்ட் பவுலர்கள் - புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா.

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான கம்பீர் தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி, முகமது ஷமி, பும்ரா.
 

click me!