பந்து ஸ்விங் ஆச்சுனா நான்தான் கிங்! முதல் ஓவரிலேயே மிட்செலின் மிடில் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்த புவனேஷ்வர் குமார்

By karthikeyan VFirst Published Nov 17, 2021, 7:28 PM IST
Highlights

முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேரைல் மிட்செலின் மிடில் ஸ்டம்ப்பை முதல் ஓவரிலேயே கழட்டி எறிந்தார் புவனேஷ்வர் குமார்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கும் நிலையில், இந்த தொடர் அவர்கள் வழிகாட்டுதலில் ஆடும் இந்திய அணிக்கு மிக முக்கியமானது.

ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகமாகினார். ஐபிஎல்லில் சிறப்பாக ஆடியதன் விளைவாக, நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் எடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயருக்கு, முதல் போட்டியிலேயே இந்திய அணிக்காக சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு கேப்பை வழங்கினார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், முகமது சிராஜ்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ராச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), டாட் ஆஸ்டில், லாக்கி ஃபெர்குசன், டிரெண்ட் போல்ட்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டேரைல் மிட்செலை முதல் ஓவரின் 3வது பந்திலேயே மிடில் ஸ்டம்ப்பை கழட்டி எறிந்தார் புவனேஷ்வர் குமார். 

கடந்த சில ஆண்டுகளாகவே டி20 கிரிக்கெட்டில் சரியாக செயல்படமுடியாமல் தடுமாறிவந்த புவனேஷ்வர் குமார், டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும், ஸ்விங்கைத்தேடி ஃபுல் லெந்த்தில் வீச, அதை பாபர் அசாமும், முகமது ரிஸ்வானும் அடித்து நொறுக்கினர். அதனால் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து, விக்கெட்டும் வீழ்த்தாதல், அதற்கடுத்த போட்டிகளில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார் புவனேஷ்வர் குமார்.

இந்நிலையில், இன்றைய போட்டியில் முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர் குமாரின் முதல் பந்தே அவுட் ஸ்விங் ஆனது. ஸ்விங் கண்டிஷனில் புவனேஷ்வர் குமார் கிங். அந்தவகையில், பந்து ஸ்விங் ஆனதால், அது புவனேஷ்வர் குமாருக்கு சாதகமாக இருந்தது. முதல் அவுட் ஸ்விங்காக வீசிய புவனேஷ்வர் குமார், டேரைல் மிட்செல் எதிர்கொண்ட இன்னிங்ஸின் 3வது பந்தை இன்ஸ்விங் செய்து நேராக ஸ்டம்ப்புக்கு கொண்டுசென்றார். அதை மிட்செல் தவறவிட, மிடில் ஸ்டம்ப் கழண்டுவிழுந்தது.

click me!