PAK vs NZ 2வது ODI: டேரைல் மிட்செல் அபார சதம்; 2 ரன்னில் சதத்தை தவறவிட்ட டாம் லேதம்! பாக்.,கிற்கு கடின இலக்கு

By karthikeyan V  |  First Published Apr 29, 2023, 8:38 PM IST

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 50 ஓவரில் 336 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 337 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது.
 


நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட  தொடரில் ஆடிவருகிறது. டி20 தொடர் 2-2 என சமனடைந்தது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்தது.

2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

Latest Videos

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷாஃபிக், முகமது ரிஸ்வான், அகா சல்மான், முகமது நவாஸ், உசாமா மிர், நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப், ஈசானுல்லா.

IPL 2023: ஐபில்லில் தனித்துவமான, கஷ்டமான சாதனையை செய்த ரஷீத் கான்.! தோனி, கோலி மாதிரி பிளேயர்ஸே செய்யாத சாதனை

நியூசிலாந்து அணி:

சாத் பௌஸ், வில் யங், டேரைல் மிட்செல், டாம் லேதம் (கேப்டன்), மார்க் சாப்மேன், ஹென்ரி நிகோல்ஸ், ஜேம்ஸ் நீஷம், ராச்சின் ரவீந்திரா, ஹென்ரி ஷிப்லி, இஷ் சோதி, மேட் ஹென்ரி.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் ஒரு தொடக்க வீரர் வில் யங் 19 ரன்னில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரராக பௌஸ் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 51 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டேரைல் மிட்செல் மற்றும் கேப்டன் டாம் லேதம் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி 3வது விக்கெட்டுக்கு 183 ரன்களை குவித்தனர்.

IPL 2023: தோனி மாதிரியே கேப்டன்சி செய்து அசத்துகிறார் ஹர்திக் பாண்டியா..! அவரோட தனித்துவமே இதுதான் - கவாஸ்கர்

அபாரமாக ஆடிய டேரைல் மிட்செல் சதமடித்தார். 119 பந்தில் மிட்செல் 129 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 85 பந்தில் 98 ரன்களை குவித்த கேப்டன் டாம் லேதம் 2 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரது அதிரடியான பேட்டிங்கால் 50 ஓவரில் 336 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, 337 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.
 

click me!