சும்மா வாயிலயே வடை சுடாதடா.. ரோஹித்தை உதாசினப்படுத்திய முகமது ஆமீரின் மூக்கை உடைத்த கனேரியா

By karthikeyan VFirst Published May 27, 2021, 6:50 PM IST
Highlights

ரோஹித்தெல்லாம் தனக்கு ஒரு பேட்ஸ்மேனே இல்லை என்கிற ரீதியில் பேசிய முகமது ஆமீருக்கு தக்க பதிலடி கொடுத்தார் டேனிஷ் கனேரியா.
 

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் முகமது ஆமீரை பாகிஸ்தான் கிரிக்கெட் அதன்பின்னர் ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்தும் ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து அவராகவே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் முகமது ஆமீர்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் முகமது ஆமீர், ரோஹித் சர்மாவெல்லாம் தனக்கு ஒரு ஆளே இல்லை எனும் ரீதியாக பேசியிருந்தார். 

“ரோஹித், கோலி ஆகியோருக்கு பந்துவீசுவது எனக்கு கடினமாக இருந்ததில்லை. ரோஹித் இடது கை ஃபாஸ்ட் பவுலரின் இன் ஸ்விங்கிற்கு கஷ்டப்பட்டிருக்கிறார். அது அவரது பலவீனம். அவுட் ஸ்விங்கும் வேகமாக வீசினால் திணறுவார். அதனால் அவருக்கு பந்துவீசுவது எனக்கு கடினமாக இருந்ததில்லை” ஆமீர் பேசியிருந்தார்.

ஆமீரின் இந்த பேச்சை பாக்., ஸ்பின்னர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆமீர் கருத்து பேசிய கனேரியா, ஆமீர் நீங்கள் தலைப்பு செய்திகளில் வர விரும்புகிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தானின் சிறந்த பவுலர் நீங்கள். உங்கள் கெரியரின் ஆரம்பக்கட்டத்தில் 2 பக்கமும் பந்தை திருப்பக்கூடிய ஸ்விங் பவுலராக திகழ்ந்தீர்கள். ஆனால் போகப்போக சோபிக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபியில் நீங்கள் இந்திய அணிக்கு எதிராக அருமையாக வீசினீர்கள். ஆசிய கோப்பையிலும் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக வீசினீர்கள். 

ஆனால் அதற்காக ரோஹித் சர்மாவுக்கு வீசுவது எளிதான காரியம் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. ரோஹித் குறித்த உங்கள் கருத்து, பும்ராவை பற்றி ரசாக் கூறியதை போன்றது. ரோஹித் ஒருநாள் கிரிக்கெட்டில் சில(3) இரட்டை சதங்களை அடித்தவர். நீங்கள் இப்போதும் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி ரோஹித்துக்கு எதிராக பந்துவீசி அவரை திணறடித்தால் தான் இப்படியெல்லாம் பேசவேண்டுமே தவிர, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு பேசக்கூடாது என்று டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.
 

click me!