2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்.. No விராட், ரோஹித்.! துணை கேப்டனாக அஷ்வினை நியமித்து அதிர்ச்சியளித்த கனேரியா

By karthikeyan VFirst Published Dec 21, 2021, 4:19 PM IST
Highlights

2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவனை தேர்வு செய்துள்ளார் டேனிஷ் கனேரியா.
 

2021ம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா. இந்த ஆண்டுதான் டி20 உலக கோப்பையும் நடந்தது.

டி20 உலக கோப்பை மட்டுமல்லாது இந்த ஆண்டு முழுவதுமாகவே மிகச்சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஆகிய இருவரையுமே தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார் டேனிஷ் கனேரியா.

பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறது. அண்மையில் கூட, ரோஹித் - ராகுலின் சாதனையை தகர்த்தது பாபர் - ரிஸ்வான் ஜோடி. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் குவித்த தொடக்க ஜோடி, அதிகமுறை 100 ரன்களுக்கு மேல் குவித்த ஜோடி என்ற சாதனைகளையெல்லாம் படைத்த பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடியை தொடக்க ஜோடியாக தேர்வு செய்துள்ளார் கனேரியா.

3ம் வரிசையில் இங்கிலாந்தின் டாப் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லரை தேர்வு செய்துள்ளார். இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் 2021ம் ஆண்டில் பெரிதாக சோபிக்காததால் அவர்களை கனேரியா எடுக்கவில்லை. 

4ம் வரிசையில் இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோனையும், 5ம் வரிசையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆடம் ஸாம்பா ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். 4 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தான் மீண்டும் இடம்பிடித்தார். இந்த ஆண்டில் மொத்தமாகவே வெறும் 3 டி20 போட்டிகளில்(நியூசிலாந்து தொடர்) ஆடி 6 விக்கெட் மட்டுமே வீழ்த்திய அஷ்வினை, 2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவனில் எடுத்ததுடன், அவரையே துணை கேப்டனாகவும் நியமித்து அதிர்ச்சியளித்துள்ளார் கனேரியா.

ஃபாஸ்ட் பவுலர்களாக டிரெண்ட் போல்ட், பும்ரா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

டேனிஷ் கனேரியா தேர்வு செய்த 2021ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்:

பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மிட்செல் மார்ஷ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷாஹீன் அஃப்ரிடி, டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா, ஆடம் ஸாம்பா. 

12வது வீரர் - ரிஷப் பண்ட்.
 

click me!