MI vs CSK: டாஸ் ரிப்போர்ட்.. மொயின் அலியை தூக்கி எறிந்த சிஎஸ்கே! மும்பை இந்தியன்ஸில் தாறுமாறு மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Apr 21, 2022, 7:23 PM IST
Highlights

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இன்றைய போட்டியில், புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் இருக்கும் சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடுகின்றன.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ஆடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி ஆடிய  6 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய 9வது இடத்தில் உள்ளது.

எனவே 2 அணிகளுக்குமே வெற்றி முக்கியம் என்ற நிலையில், இரு அணிகளும் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில்  2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிஎஸ்கே அணி ஏலத்திற்கு முன் தக்கவைத்த மொயின் அலி, இந்த சீசனில் திணறியதால் அவரை நீக்கிவிட்டு மிட்செல் சாண்ட்னெரை எடுத்துள்ளது.  மேலும் கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக ட்வைன் ப்ரிட்டோரியஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, தோனி, ரவீந்திர ஜடேஜா, ட்வைன் ப்ரிட்டோரியஸ், ட்வைன் பிராவோ, மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி.

மும்பை இந்தியன்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டைமல் மில்ஸ், ஃபேபியன் ஆலன் மற்றும் முருகன் அஷ்வின் ஆகிய மூவரும் நீக்கப்பட்டு முறையே டேனியல் சாம்ஸ், ரிலே மெரிடித் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் ரித்திக் ஷோகீன் ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி:

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கைரன் பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ப்ரித் பும்ரா.
 

click me!