MI vs CSK டாஸ் வென்ற தோனியின் அதிரடி முடிவு..! சிஎஸ்கே ஆடும் லெவனில் மேட்ச் வின்னிங் ஆல்ரவுண்டர் இடம் இல்ல

By karthikeyan VFirst Published Sep 19, 2020, 7:27 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசனில் அபுதாபியில் மும்பை இந்தியன்ஸுக்கும் சிஎஸ்கேவுக்கும் இடையேயான முதல் போட்டியில் டாஸ் வென்ற   சிஎஸ்கே கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.
 

ஐபிஎல் 13வது சீசன் இன்று தொடங்கியது. அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே முதல் போட்டி நடக்கிறது. ஐபிஎல்லின் வெற்றிகரமான இரு பெரும் ஜாம்பவான் அணிகள் முதல் போட்டியிலேயே மோதுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த போட்டியை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்திய நேரப்படி 7.30 மணிக்கு போட்டி தொடங்குவதால் சரியாக 7 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பவுலிங்கை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

2வது இன்னிங்ஸில் பனியால் பந்துவீசுவது சற்று கடினமாக இருக்கும் என்பதால், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார் தோனி. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடவுள்ளது.

இரு அணிகளின் ஆடும் லெவனை பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா(கேப்டன்), குயிண்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சவுரவ் திவாரி, பொல்லார்டு, ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன், ராகுல் சாஹர், டிரெண்ட் போல்ட், ஜஸ்ப்ரித் பும்ரா.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் குல்ட்டர்நைல் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை. 4 வெளிநாட்டு வீரர்களாக டி காக், போல்ட், பொல்லார்டு மற்றும் பாட்டின்சன் ஆகியோர் ஆடுகின்றனர்.

சிஎஸ்கே ஆடும் லெவன்:

ஷேன் வாட்சன், முரளி விஜய், ஃபாஃப் டுப்ளெசிஸ், அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா, லுங்கி இங்கிடி.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ட்வைன் பிராவோவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 4 வெளிநாட்டு வீரர்களாக வாட்சன், டுப்ளெசிஸ், இங்கிடி மற்றும் சாம் கரன் ஆகியோர் உள்ளனர்.
 

click me!