ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், புதிய சீசன் மற்றும் புதிய ரோலுக்காக காத்திருக்க முடியாது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இதில், எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5 முறை டிராபியை தட்டித் தூக்கியது. கடந்த 16ஆவது ஐபிஎல் சீசனில் ரவீந்திர ஜடேஜா கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் எடுத்துக் கொடுக்கவே சிஎஸ்கே அணியானது 5ஆவது முறையாக டிராபியை வென்றது.
ஒவ்வொரு சீசன் தொடங்கப்படும் போதும் தோனி இந்த சீசனில் ஓய்வை அறிவிப்பார், அடுத்த சீசனில் ஓய்வை அறிவிப்பார் என்ற விவாதம் எழு தொடங்கும். கடந்த சீசனிலும் இது நடந்தது. உங்களது கடைசி சீசன் குறித்து நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இது தான் என்னுடைய கடைசி சீசன் என்று எப்படி நீங்களே முடிவு செய்துவிட்டீர்கள் என்று தோனி திரும்ப மேட்ச் ரெப்ரியிடம் கேட்டார்.
இதையடுத்து தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டது. கடைசியாக 5ஆவது முறையாக டிராபியை கைப்பற்றிய போது கூட ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று தோனி கூறினார். ஆனால் ரசிகர்களுக்காக அடுத்த சீசனிலும் விளையாடவேன் என்றார்.
இந்த நிலையில் தான் தோனியின் ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருகிறது. அதில் புதிய சீசன் மற்றும் புதிய ரோலுக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார். இதன் மூலமாக பயிற்சியாளராக செயல்படுவாரோ இல்லையா என்பது குறித்து விவாதிக்க தோன்றியது.
மேலும் ஒரு சில ரசிகர்கள் தோனி பயிற்சியாளராக வேண்டும் என்றும் சில ரசிகர்கள் ஆலோசகராக வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் சிலரோ தோனிக்கு ஓய்வுக்கான நேரம் வந்துவிட்டது, ஆதலால் புதிய கேப்டன் இந்த சீசனில் நியமிக்கப்படலாம் என்றும் கூறி வருகின்றனர். எது எப்படியோ வரும் 22 ஆம் தேதி சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியில் தோனியின் பதிவுக்கான காரணம் குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Facebook post of MS Dhoni.
- It's time for the Thala show in IPL 2024. 🦁 pic.twitter.com/vM1HBtrKEa