#IPL2021 சைனாமேன் பவுலர் உட்பட 2 வீரர்களை புதிதாக எடுத்த சிஎஸ்கே..!

Published : Mar 29, 2021, 09:49 PM IST
#IPL2021 சைனாமேன் பவுலர் உட்பட 2 வீரர்களை புதிதாக எடுத்த சிஎஸ்கே..!

சுருக்கம்

சிஎஸ்கே அணி 2 ஆஃப்கானிஸ்தான் வீரர்களை நெட் பவுலர்களாக அணியில் எடுத்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்குகிறது. கடந்த சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, இந்த சீசனில் செம கம்பேக் கொடுக்கும் முனைப்பில் முதல் அணியாக சென்னையில் கேம்ப்பை போட்டு பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே அணி, தற்போது மும்பையில் உள்ளது.

இந்த சீசனுக்கான நெட் பவுலராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃபாஸ்ட் பவுலர் ஹார்டஸ் வில்ஜோனை ஏற்கனவே சிஎஸ்கே அணி எடுத்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக 2 ஆஃப்கான் பவுலர்களை நெட் பவுலர்களாக எடுத்துள்ளது.

16 வயதே ஆன ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்(சைனாமேன் பவுலர்) நூர் அகமதுவையும், இடது கை ஃபாஸ்ட் பவுலரான ஃபஸால்ஹக் ஃபரூக்கியையும் நெட் பவுலர்களாக எடுத்துள்ளது சிஎஸ்கே.

சிஎஸ்கே அணி, 14வது சீசனுக்கான ஏலத்தில், கிருஷ்ணப்பா கௌதம், மொயின் அலி, புஜாரா, ஹரி நிஷாந்த், ஹரிசங்கர் ரெட்டி, கே.பகத் வர்மா ஆகிய வீரர்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது. 
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!