
ஐபிஎல் 14வது சீசனுக்கான சென்னையில் நடந்துவருகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்கள் மூவர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி தொடர் ஆகிய உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக ஆடிவரும் பின்வரிசை பேட்ஸ்மேனான ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. தமிழக ஸ்பின்னர் மணிமாறன் சித்தார்த்தை அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு டெல்லி கேபிடள்ஸ் அணி எடுத்தது.
தமிழக அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஹரி நிஷாந்த்தை சிஎஸ்கே அணி அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது. ஹரி நிஷாந்த்தும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக ஆடிவருகிறார். அண்மையில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி தொடரை தமிழக அணி வென்றபோது, அதில் முக்கிய பங்காற்றியவர் ஹரி நிஷாந்த். உள்ளூர் வீரரான ஹரி நிஷாந்த்தை சிஎஸ்கே எடுத்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
சிஎஸ்கே அணி கழட்டிவிட்ட ஹர்பஜன் சிங்கை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கேகேஆர் அணியும், கேதர் ஜாதவை ரூ.2 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் எடுத்துள்ளன.