#CSKvsDC ஆரம்பத்துலயே அடுத்தடுத்த ஓவரில் 2 விக்கெட்டை இழந்த சிஎஸ்கே..! டெல்லி கேபிடள்ஸுக்கு செம ஸ்டார்ட்

Published : Apr 10, 2021, 07:59 PM IST
#CSKvsDC ஆரம்பத்துலயே அடுத்தடுத்த ஓவரில் 2 விக்கெட்டை இழந்த சிஎஸ்கே..! டெல்லி கேபிடள்ஸுக்கு செம ஸ்டார்ட்

சுருக்கம்

சிஎஸ்கே அணியின் முதல் 2 விக்கெட்டுகளை 3 ஓவர்களிலேயே வீழ்த்தி டெல்லி கேபிடள்ஸ் அணி சிறப்பாக தொடங்கியது.  

சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, சிஎஸ்கேவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டுப்ளெசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ரஹானே, ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷிம்ரான் ஹெட்மயர், கிறிஸ் வோக்ஸ், அஷ்வின், டாம் கரன், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான்.

இதையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டுப்ளெசிஸ் ஆகிய இருவரும் இறங்கினர். 2வது ஓவரிலேயே அருமையான இன்ஸ்விங் பந்தை வீசி டுப்ளெசிஸை டக் அவுட்டாக்கினார் ஆவேஷ் கான். அடுத்த ஓவரில் 5 ரன்னில் ருதுராஜ் கெய்க்வாட்டை கிறிஸ் வோக்ஸ் வீழ்த்த, 7 ரன்னுக்கே 2 விக்கெட்டை இழந்தது சிஎஸ்கே அணி.

இதையடுத்து மொயின் அலியும் சுரேஷ் ரெய்னாவும் இணைந்து ஆடிவருகின்றனர். இவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினால் தான், சிஎஸ்கே அணி பெரிய ஸ்கோரை அடிக்க முடியும்.
 

PREV
click me!

Recommended Stories

ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் முச்சல் திருமணம் ரத்து..! அதிகாரப்பூர்வமாக அறிவித்த மந்தனா..! இதுதான் காரணம்!