CSK vs DC: சிஎஸ்கே - டெல்லி கேபிடள்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : May 08, 2022, 04:08 PM IST
CSK vs DC: சிஎஸ்கே - டெல்லி கேபிடள்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசனில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் வெற்றி பெறுவது டெல்லி கேபிடள்ஸுக்கு முக்கியம். ஏனெனில் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சிஎஸ்கே அணியைவிட, பிளே ஆஃப் வாய்ப்பை பெற்றுள்ள டெல்லி அணிக்குத்தான் இது முக்கியமான போட்டி.

இந்த போட்டியில் அக்ஸர் படேல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் ஆடாத அக்ஸர் படேல் இன்றைய போட்டியில் ஆட வாய்ப்புள்ளது. ஆனால் பிரித்வி ஷா ஆட வாய்ப்பில்லை.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:


டேவிட் வார்னர், மந்தீப் சிங், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், அன்ரிக் நோர்க்யா, குல்தீப் யாதவ், கலீல் அகமது.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றத்திற்கும் வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் சிஎஸ்கே அணி களமிறங்கும்.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பாதி ராயுடு, ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ட்வைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், மஹீஷ் தீக்‌ஷனா, முகேஷ் சௌத்ரி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs WI: 250 ரன் அடிச்சும் தோத்துட்டோமே.. இந்திய பவுலிங் கோச்சை விளாசித் தள்ளிய ஜாம்பவான்!
Harmanpreet Kaur Net Worth: கோடிகளை குவித்த ஹர்மன்ப்ரீத் கவுர்! மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?