3 வருஷமா ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடவே இல்லாத பொல்லார்டை கேப்டனாக நியமித்தது ஏன்..? இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Sep 10, 2019, 10:08 AM IST
Highlights

பொல்லார்டு கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவேயில்லை. மூன்று வருடம் ஒருநாள் போட்டியில் ஆடவேயில்லாத நிலையிலும் பொல்லார்டு மீது நம்பிக்கை வைத்து அவர் கேப்டனாக்கப்பட்டுள்ளார். 
 

வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். 3 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டிலேயே ஆடாத பொல்லார்டை கேப்டனாக்கியது ஏன் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் காரணம் கூறியுள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பையில் படுமோசமாக தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. அதன்பின்னர் சொந்த மண்ணில் இந்தியாவிடம் மூன்றுவிதமான போட்டி தொடர்களிலும் ஒயிட்வாஷ் ஆனது. 3 டி20 போட்டிகள் 2 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலுமே தோற்றது. 

தொடர் தோல்விகளை சந்தித்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை வலுவான அணியாக உருவாக்கி வெற்றிநடை போடவைக்கும் நோக்கில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸின் டெஸ்ட், ஒருநாள் ஆகிய அணிகளின் கேப்டனாக ஹோல்டரும் டி20 அணியின் கேப்டனாக பிராத்வெயிட்டும் இருந்துவந்தனர். 

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஹோல்டரும் பிராத்வெயிட்டும் விடுவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் பொல்லார்டு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் கேப்டனாக ஹோல்டரே தொடர்வார். 

பொல்லார்டு கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடவேயில்லை. மூன்று வருடம் ஒருநாள் போட்டியில் ஆடவேயில்லாத நிலையிலும் பொல்லார்டு மீது நம்பிக்கை வைத்து அவர் கேப்டனாக்கப்பட்டுள்ளார். 

அதற்கான காரணத்தை பொல்லார்டுக்கு வலுவாக தனது ஆதரவை தெரிவித்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிக்கி ஸ்கெரிட்டே தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆடாத பொல்லார்டை கேப்டனாக்கியது ஏன் என்பது குறித்து பேசிய ஸ்கெரிட், ஹோல்டர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கியமான சக்தி. அவர் தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக தொடரவுள்ளார். இப்போது ஒருநாள் அணிக்கு பொல்லார்டு கேப்டன் ஆகியிருப்பதால், அணியில் தனக்கான இடத்துக்காக ஹோல்டர் போட்டி போட வேண்டும். அது அவரை மேலும் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்க உதவும். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வதற்கு பொல்லார்டு தான் சரியான நபர். பொல்லார்டிடம் எனக்கு ரொம்ப பிடித்த விஷயம், ஆட்டத்தின் மீதான அவரது ஆர்வமும் அர்ப்பணிப்பும்தான் என்று ஸ்கெரிட் தெரிவித்துள்ளார். 

click me!