கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்த வீரருக்கு தடை.. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அதிரடி

By karthikeyan VFirst Published Jan 8, 2020, 3:07 PM IST
Highlights

கேகேஆர் அணி ஏலத்தில் எடுத்த வீரருக்கு 3 மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பந்துவீச கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. 
 

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயது இளம் ஆல்ரவுண்டர் கிறிஸ் கிரீன். இவரை கேகேஆர் அணி, ஐபிஎல் ஏலத்தில், அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு எடுத்தது. 

பிக்பேஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணியில் ஆடிவரும் கிறிஸ் கிரீனின் பவுலிங் ஆக்‌ஷன் விதிகளுக்கு புறம்பாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால் அவரை பரிசோதிக்க வேண்டியிருப்பதால், 3 மாதங்களுக்கு அவர் பந்துவீச கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது. 

பந்துவீச மட்டும்தான் 3 மாதங்கள் தடையே தவிர, அவர் அணியில் இடம்பெற்று பேட்டிங் ஆடலாம். அதிலெல்லாம் எந்தவித பிரச்னையுமில்லை. கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியாவில் கிரீன் பந்துவீசத்தான் தடை விதித்துள்ளது. எனவே, அவர் ஒருவேளை ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஆடும் லெவனில் இடம்பிடித்தால், ஐபிஎல்லில் பந்துவீசுவதில் சிக்கல் இருக்காது. 

Also Read - எல்லாத்தையும் சொன்ன நீங்க, பெயர்களையும் லிஸ்ட் போட வேண்டியதுதானே அக்தர்.. பாகிஸ்தான் முன்னாள் வீரர் அதிரடி

ஒருவேளை, ஐபிஎல்லிலும் அவரது பவுலிங் ஆக்‌ஷன் சர்ச்சைக்குள்ளானால், பந்துவீச முடியாமல் போகலாம். 
 

click me!