Ashes Series முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..! சீனியர் வீரர் மீண்டும் அணியில் சேர்ப்பு

Published : Nov 17, 2021, 09:41 PM IST
Ashes Series முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..! சீனியர் வீரர் மீண்டும் அணியில் சேர்ப்பு

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு உலக கோப்பைக்கு நிகரான முக்கியமான தொடர் ஆஷஸ் தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் இரு அணிகளுக்கும் இடையே களத்தில் அனல் பறக்கும். இரு அணிகளுமே ஆஷஸ் தொடரை வெல்ல கடுமையாக போராடும்.

2019 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. அந்த தொடர் டிராவில் முடிந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடக்கும் 2021-2022 ஆஷஸ் தொடரை வெல்லும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

ஆஷஸ் தொடருக்கான 22 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஆஷஸ் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டிம் பெய்ன் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், உஸ்மான் கவாஜா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பையை முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்த மிட்செல் மார்ஷ் இந்த அணியில் இடம்பெறவில்லை.

ஆஷஸ் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி:

டிம் பெய்ன் (கேப்டன்), பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நெசெர், ஜெய் ரிச்சர்ட்ஸன், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்.

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் க்ராவ்லி, ஹசீப் ஹமீத், டேனியல் லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், க்ரைக் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், பென் ஸ்டோக்ஸ்.
 

PREV
click me!

Recommended Stories

Asian Games 2026: ஆசிய போட்டியில் தங்கம் வெல்லுமா இந்தியா? 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!