#IPL2021 முதல் மேட்ச்சே என் கடைசி மேட்ச் ஆகிடுமோ..? பீதியில் மும்பை இந்தியன்ஸ் வீரர்.. இதுதான் காரணம்

By karthikeyan VFirst Published Apr 10, 2021, 2:59 PM IST
Highlights

முதல் போட்டியிலேயே கேப்டனை ரன் அவுட்டாக்கிய தனக்கு முதல் போட்டியே கடைசி போட்டி ஆகிவிடுமோ என்று கிறிஸ் லின் தனது பயத்தை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்தியுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ஆர்சிபியும் மோதின. சென்னையில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 159 ரன்கள் அடிக்க, 160 ரன்கள் என்ற இலக்கை கடைசி பந்தில் எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆர்சிபி அணி.

இந்த போட்டியில் ஆரம்பத்திலேயே செம ஃபார்மில் அடித்து ஆட தொடங்கி பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசி 19 ரன் அடித்திருந்த ரோஹித்தை தவறான ஒரு ரன்னுக்கு அழைத்து, பின்னர் வேண்டாம் என்று கிறிஸ் லின் மறுத்ததால் ரோஹித் 4வது ஓவரின் கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த சீசன் முழுவதும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல், டி காக் குவாரண்டினில் இருப்பதால் முதல் முறையாக ஆடும் வாய்ப்பை பெற்ற லின், மும்பை அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே, நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ரோஹித்தை ரன் அவுட்டாக்கினார். ஆனாலும் அதன்பின்னர் அந்த பொறுப்பை உணர்ந்து அடித்து ஆடி 49 ரன்கள் அடித்தார். ஆனாலும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை.

போட்டிக்கு பின்னர், ரோஹித்தை ரன் அவுட்டாக்கியது குறித்து பேசிய கிறிஸ் லின், ரோஹித் ரன் அவுட்டானதும் உண்மையாகவே கொஞ்சம் பதற்றமடைந்துவிட்டேன். மும்பை அணிக்காக முதல் போட்டியில் ஆடுகிறேன்; ரோஹித்துடன் முதல் முறையாக இணைந்து ஆடுகிறேன்.  

முதல் போட்டியிலேயே அவரை ரன் அவுட்டாக்கிவிட்டேன். ரன் ஓடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அதில் ரன் இல்லை என்று உணர்ந்ததால் ஓடவில்லை. அவரை கடந்திருக்க முடியும் என்றால், கண்டிப்பாக ரோஹித்துக்காக எனது விக்கெட்டை தியாகம் செய்திருப்பேன். அது முடியாததால் தான் நான் ஓடவில்லை.

முதல் போட்டியிலேயே அணியின் கேப்டனை அவுட்டாக்கிவிட்டேன். யாருக்கு தெரியும்.. எனக்கு முதல் போட்டியே கடைசி போட்டியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கிண்டலாக சிரித்துக்கொண்டே சொன்னார் லின். அது நிஜம் தான்.
 

click me!