வெறித்தனமான பேட்டிங்கை விடாமல் தொடரும் கிறிஸ் லின்.. டி10 போட்டியில் தெறிக்கவிடும் லின்.. செம அப்செட்டில் கேகேஆர்

By karthikeyan VFirst Published Nov 22, 2019, 12:06 PM IST
Highlights

கேகேஆர் அணியிலிருந்து அண்மையில் கழட்டிவிடப்பட்ட ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் லின், அபுதாபி டி10 லீக் தொடரில் வெறித்தனமாக ஆடிவருகிறார். 
 

அபுதாபி டி10 தொடரில் மராத்தா அரேபியன்ஸ் அணியில் ஆடிவருகிறார் லின். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் லின் சரியாக ஆடவில்லை. அதன்பின்னர் தாறுமாறாக அடித்து ஆடிவருகிறார். அபுதாபி அணிக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 91 ரன்களை குவித்து சாதனை படைத்தார். அதற்கடுத்த போட்டியில் 31 பந்தில் 61 ரன்களை விளாசினார். 

இந்நிலையில், டெல்லி புல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி தெறிக்கவிட்டுள்ளார். டெல்லி புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்ட லின், 33 பந்துகளில் 89 ரன்களை குவித்துள்ளார்.

 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மராத்தா அரேபியன்ஸ் அணியின் தொடக்க வீரர் லின், தொடக்கம் முதலே அடித்து ஆட தொடங்கினார். அதிரடியாக ஆடிய அவர், பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். வெறும் 33 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடிய லின், 5 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 89 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். லின்னின் அதிரடியான பேட்டிங்கால் 10 ஓவரில் 146 ரன்களை குவித்தது மராத்தா அரேபியன்ஸ் அணி.

147 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி புல்ஸ் அணி 10 ஓவரில் 116 ரன்கள் மட்டுமே அடித்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

லின்னின் அதிரடியான பேட்டிங், கேகேஆர் அணிக்கு கண்டிப்பாக கலக்கத்தை ஏற்படுத்தும். நல்ல ஃபார்மில் அடித்து நொறுக்கும் லின்னை அவசரப்பட்டு கழட்டிவிட்டது குறித்து அந்த அணி நிர்வாகம் வருந்தும். ஒருவேளை ஏலத்தில், இதற்கு முன் எடுத்த தொகையை விட குறைவான தொகையில் மீண்டும் லின்னை எடுக்கும் நினைப்பில் அவரை கழட்டிவிட்டிருந்தாலும், தற்போது அவர் இருக்கும் ஃபார்மிற்கு, மற்ற அணிகளும் கண்டிப்பாக அவருக்காக ஏலத்தில் கடுமையாக போட்டி போடும் என்பதால், எப்படி பார்த்தாலும் கேகேஆர் அணிக்கு இது வருத்தமான நிகழ்வுதான்.

click me!