வார்னர் கம்பேக் சதம்.. அசத்தும் ஆஸ்திரேலிய வீரர்கள்.. புஸ்ஸுனு போன பில்டப்

By karthikeyan VFirst Published Nov 22, 2019, 11:22 AM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர், ஃபார்முக்கு திரும்பி, அபாரமாக ஆடி சதமடித்து அசத்தியுள்ளார். 

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடியது. பாகிஸ்தான் வீரர்கள், ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் மளமளவென சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். 

பாகிஸ்தான் அணியில் ஆசாத் ஷாஃபிக் மட்டுமே அரைசதம் அடித்தார். பாபர் அசாம், அசார் அலி, ஹாரிஸ் சொஹைல், இஃப்டிகார் அகமது ஆகியோர் ஏமாற்றமளித்தனர். ஷாஃபிக் மட்டும் 76 ரன்கள் அடித்தார். அவர் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்ததால் அவர் மீதான அழுத்தம் அதிகரித்தது. 76 ரன்களில் 9வது விக்கெட்டாக அவர் ஆட்டமிழந்தார். 

முதல் நாள் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணி வெறும் 240 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் நாள் ஆட்டம் முடிந்தது. இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 

டேவிட் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினர். தொடக்கம் முதலே நிதானமாகவும் தெளிவாகவும் ஆடினர். வார்னர் - பர்ன்ஸ் தொடக்க ஜோடியை பிரிக்க முடியாமல் பாகிஸ்தான் பவுலர்கள் திணறினர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 16 வயது இளம் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் நசீம் ஷாவின் பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை. நசீம் ஷாவின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்யவில்லை. நசீம் ஷா மீது எதிர்பார்ப்பு இருந்தது மட்டுமல்லாது, அவருக்கு பயங்கர பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை வார்னரும் பர்ன்ஸும் சேர்ந்து தகர்த்தெறிந்து விட்டனர். வார்னர் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரும் அபாரமாக ஆடினர். 

ஆஷஸ் தொடரில் ஃபார்மில் இல்லாமல் படுமோசமாக சொதப்பிய வார்னர், இந்த போட்டியில் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். அபாரமாக ஆடிய வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 22வது சதத்தை பூர்த்தி செய்தார். அவரை தொடர்ந்து ஜோ பர்ன்ஸும் சதத்தை நெருங்கினார். ஆனால் 97 ரன்களில் யாசிர் ஷாவின் பந்தில் ஆட்டமிழந்து 3 ரன்களில் சதத்தை தவறவிட்டார். முதல் விக்கெட்டுக்கு வார்னரும் பர்ன்ஸும் இணைந்து 222 ரன்களை குவித்தனர். பர்ன்ஸ் ஆட்டமிழந்ததை அடுத்து, மார்னஸ் லபுஷேன், வார்னருடன் ஜோடி சேர்ந்துள்ளார். 
 

click me!