இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா, அவரது கெரியரில் அவருக்கு கடும் சவாலாக இருந்த பவுலர் யார் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாரா. 2010ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான புஜாரா, இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 சதங்கள் மற்றும் 34 அரைசதங்களுடன் 7014 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் ஆர்டரில் ராகுல் டிராவிட் ஆடிய முக்கியமான 3ம் வரிசையில் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. ராகுல் டிராவிட் என்ற மிகப்பெரிய லெஜண்ட் கிரிக்கெட்டரின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. அப்பேர்ப்பட்ட இடத்தை தனது நேர்த்தியான பேட்டிங் மற்றும் மிகச்சிறந்த பொறுமையாலும் நிரப்பியவர் புஜாரா.
Womens U19 T20 World Cup: இலங்கையை அசால்ட்டா வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
புஜாரா சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்டவர். ஆனால் அதைவிட சிறப்பானது அவரது பொறுமையும் நிதானமும் தான். எந்த விதமான நெருக்கடியான சூழலிலும் மனதை தளரவிடாமல் நம்பிக்கையுடன் களத்தில் பொறுமையாக நிலைத்து நின்று ஆடக்கூடிய மனவலிமை கொண்டவர் புஜாரா.
அடுத்ததாக இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக தீவிரமாக தயாராகிவரும் புஜாரா, ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோவிற்கு அளித்த பேட்டியில், அதிக பொறுமையான புஜாரா எந்த சூழலில் அதிக கோபப்பட்டார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த புஜாரா, நான் அவுட்டாகும்போது மட்டும்தான் கோபப்படுவேன். அவுட்டாகும்போது நான் உச்சபட்ச கோபமடைவேன். ஒவ்வொரு முறை அவுட்டாகும்போதும் எனக்கு கோபம் வரும் என்றார் புஜாரா.
தனது தடுப்பாட்ட உத்தியால் எதிரணி பவுலர்கள் பல பேரை கதறவிட்டுள்ள புஜாரா, தனது கெரியரில் தான் எதிர்கொண்ட பவுலர்களிலேயே சவாலான பவுலர் பாட் கம்மின்ஸ் தான் என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை எதிர்கொள்வது மிகக்கடினம் என்று கூறியுள்ளார்.
சச்சின் - கோலி ஒப்பீடு.. கபில் தேவ் அதிரடி
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், சமகாலத்தின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணிக்காக 47 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 214 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.