TNPL 2022: மதுரை பாந்தர்ஸிடம் மண்டியிட்டு சரணடைந்த சேப்பாக் பேட்டிங் ஆர்டர்..! 38 ரன்னுக்கே 6 விக்கெட் காலி

By karthikeyan VFirst Published Jun 25, 2022, 4:03 PM IST
Highlights

மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி படுமட்டமாக பேட்டிங் ஆடிவருகிறது. 6.2 ஓவரில் 38 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.
 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசனில் இன்று நெல்லையில் நடந்துவரும் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் ஆடிவருகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

மதுரை பாந்தர்ஸ் அணி:

என்.எஸ்.சதுர்வேத் (ஏப்டன்), அருண் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆதித்யா, பாலசந்தர் அனிருத், ஔஷிக் ஸ்ரீநிவாஸ், கிரண் ஆகாஷ், ஜெகதீசன் கௌஷிக், கே ராஜ்குமார், ஆர் சிலம்பரசன், சன்னி சந்து, வருண் சக்கரவர்த்தி.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி:

கௌஷிக் காந்தி (கேப்டன்), என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஆர் அலெக்ஸாண்டர், எஸ் ஹரிஷ் குமார், ஜெகநாத் ஸ்ரீநிவாஸ், சந்தீப் வாரியர், உத்திரசாமி சசிதேவ், ராஜகோபால் சதீஷ், மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ், எஸ் சுஜய்.

இதையும் படிங்க - 

என்னது ஜடேஜாவுக்கே டி20 உலக கோப்பை அணியில் இடம் இல்லையா..? ஜடேஜா இடத்தை தட்டித்தூக்கிய தரமான வீரர்முதலில் பேட்டிங் ஆடிவரும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 முறை சாம்பியன் அணியை போல பேட்டிங் ஆடவில்லை. படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் கௌஷிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.

சுஜய் 11 ரன்னிலும், சோனு யாதவ் 9 ரன்னிலும் ஆட்டமிழக்க, ராஜகோபால் சதீஷ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயிலேயே 5 விக்கெட்டுகளை இழந்தது சேப்பாக் அணி. பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரின் 2வது பந்தில் ஸ்ரீநிவாஸ் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டாக, 6.2 ஓவரில் 38 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது சேப்பாக் அணி.
 

click me!