ஆளாளுக்கு சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்!

By Rsiva kumar  |  First Published Jun 19, 2023, 9:23 PM IST

சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 126 ரன்கள் எடுத்துள்ளது.


தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் முதலில் வருவதற்கு கடுமையாக போராடி வருகின்றன. ஏற்கனவே 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. லைகா கோவை கிங்ஸ் அணி 2 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று ஒன்றில் தோல்வி அடைந்து 4ஆவது இடத்தில் உள்ளது.

சேப்பாக்கம் ஹாட்ரிக் வெற்றி பெறுமா? சாய் சுதர்சன் சதம் அடிப்பாரா? லைகா கோவை கிங்ஸ் பீல்டிங்!

Tap to resize

Latest Videos

தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 9ஆது டிஎன்பிஎல் லீக் போட்டி திண்டுக்கல் பகுதியில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதில், ஒவ்வொரு வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

உணர்ச்சிவசப்பட்டு ஹெல்மெட்டை தூக்கி எறிந்தது எனது தவறு தான் – ஆவேஷ் கான்!

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் அதிகபட்சமாக எஸ் ஹரீஸ் குமார் 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இவரைத் தொடர்ந்து உதிரசாமி சசிதேவ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதற்கு முன்னதாக நடந்த 2 போட்டிகளில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், லைகா கோவை கிங்ஸ் அணி 2 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை வில்வித்தையில் 3ஆவது முறையாக தங்கம் வென்ற இந்திய வீரர் அபிஷேக் வர்மா!

 

லைகா கோவை கிங்ஸ்:

ஆதிக் ரஹ்மான், ஜே சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), ராம் அரவிந்த், ஷாருக்கான் (கேப்டன்), எம் முகமது, யு முகிலேஷ், மணிமாறன் சித்தார்த், வள்ளியப்பன் யுதீஸ்வரன், ஜதாவத் சுப்ரமண்யன், கே கௌதம் தாமரை கண்ணன்.

சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ்:

பிரதோஷ் பால், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்/ கேப்டன்), பாபா இந்திரஜித், சஞ்சய் யாதவ், எஸ் ஹரிஷ் குமார், உதிரசாமி சசிதேவ், ராஹில் ஷா, ராமலிங்கம் ரோகித், சந்தோஷ் ஷிவ், எம் சிலம்பரசன், எம் விஜூ அருள்

 

Rattled CSG batters with his வெறித்தனமான spell!😎💥💪🏼 pic.twitter.com/u6gZW4UIZ4

— TNPL (@TNPremierLeague)

 

click me!