ஐபிஎல் 2020: சிஎஸ்கேவின் பெஸ்ட் டீம் காம்பினேஷன்

By karthikeyan VFirst Published Mar 5, 2020, 3:49 PM IST
Highlights

ஐபிஎல் 13வது சீசன் தொடங்கவுள்ள நிலையில் சிஎஸ்கேவின் பெஸ்ட் டீம் காம்பினேஷன் குறித்து பார்ப்போம். 
 

ஐபிஎல்லில் 12 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், வெற்றிகரமான அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்று. மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று ஐபிஎல்லின் ஆதிக்க அணியாக கோலோச்சுகிறது. சிஎஸ்கே அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. கோப்பையை வென்றதன் அடிப்படையில் நம்பரில் வேண்டுமானால் சிஎஸ்கே, ஒரு நம்பர் குறைவாக இருக்கலாம். ஆனால் ஐபிஎல்லில் சிஎஸ்கே தான் அதிகபட்ச ஆதிக்க மற்றும் வெற்றிகரமான அணி. 

ஐபிஎல்லில் சிஎஸ்கேவை தவிர மற்ற அனைத்து அணிகளுமே, குறைந்தது ஒரு சீசனிலாவது அசால்ட்டாக லீக் சுற்றுடன் வெளியேற்றப்பட்டிருக்கும். ஆனால் சிஎஸ்கேவை பிளே ஆஃபிற்கு தகுதிபெறாமல் தடுப்பது என்பதே முடியாத காரியம்.

ஐபிஎல்லில் இதுவரை நடந்த 12 சீசன்களில் 2 சீசன்களில் சிஎஸ்கே ஆடவில்லை. ஆடிய 10 சீசன்களில் 8 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது சிஎஸ்கே அணி. அவற்றில் 5 முறை தோற்று, 3 முறை கோப்பையை வென்றுள்ளது. 

சிஎஸ்கே அணி ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்த அந்த அணியின் கோர் டீம் வலுவாக இருப்பதுதான் முக்கியமான காரணம். தோனி, ரெய்னா, பிராவோ, ஜடேஜா என அந்த அணியின் கோர் டீம் மிகவும் வலுவாக உள்ளது. இவர்கள் தவிர ஷேன் வாட்சன், டுப்ளெசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் கடந்த இரண்டு சீசன்களாக சிஎஸ்கே அணிக்கு பல வெற்றிகளை குவித்து கொடுத்து நட்சத்திர வீரர்களாக ஜொலிக்கின்றனர். 

சிஎஸ்கே அணி, தேவையில்லாமல் ஏலத்தில் வீரர்களை எடுக்காது. அணிக்கு உண்மையாகவே தேவைப்படும் மிக குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்குமே தவிர, பெருமைக்காக வீரர்களை காசு கொடுத்து எடுக்காது. 

2018ல் கோப்பையை வென்ற சிஎஸ்கே, 2019ம் ஆண்டு நடந்த ஐபிஎல்லில் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸிடம் தோற்று கோப்பையை இழந்தது. இந்நிலையில் இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது சிஎஸ்கே அணி. 

இந்த சீசனுக்கான ஏலத்தில் சாம் கரன், ஹேசில்வுட் ஆகிய 2 பெரிய வெளிநாட்டு வீரர்களையும் சாய் கிஷோர் போன்ற உள்ளூர் வீரர்களையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. 

இந்நிலையில், சிஎஸ்கே அணியில் பெரும்பாலும் களமிறங்கும் டீம் காம்பினேஷன் குறித்து பார்ப்போம். 

டாப் ஆர்டரில் டுப்ளெசிஸ், ஷேன் வாட்சன், ரெய்னா. தோனி, ராயுடு மிடில் ஆர்டர்கள். ஆல்ரவுண்டர்கள் பிராவோ, ஜடேஜா அணியின் கோர் வீரர்கள். எனவே அவர்கள் கண்டிப்பாக அணியில் இருப்பார்கள். ஜடேஜாவுடன் ஸ்பின்னராக பியூஷ் சாவ்லா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் ஆடுகளத்தின் தன்மை, டீம் காம்பினேஷனை பொறுத்து மாறி மாறி எடுக்கப்பட வாய்ப்புள்ளது. 

சென்னையில் நடக்கும் போட்டிகளில் ஸ்பின்னர்கள் கூடுதலாக இருப்பார்கள் என்பதால், ஜடேஜா, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிக் ஆகியோர் ஆட வாய்ப்புள்ளது. அதனால் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகிய இரண்டு ஃபாஸ்ட் பவுலர்கள் மட்டுமே ஆடுவார்கள். பெங்களூரு, மும்பை, பஞ்சாப், கொல்கத்தா போன்ற ஆடுகளங்களில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூருடன் இங்கிடியும் இணைந்து ஆடுவார். இங்கிடி ஆடும் போட்டிகளில் சாம் கரன் இருக்க வாய்ப்பில்லை. 

சாம் கரன் ஆடும்போது இங்கிடி அல்லது ஷேன் வாட்சன் ஆட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. 

Also Read - ஐபிஎல் 2020: பயிற்சியில் பந்துகளை பறக்கவிடும் தல.. வீடியோ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவன்:

டுப்ளெசிஸ்/ஷேன் வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன்/பிராவோ, ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இங்கிடி/இம்ரான் தாஹிர். 
 

click me!