பார்ட்னரின் முகத்தில் சாணியடித்த சாஹல்

By karthikeyan VFirst Published May 15, 2019, 3:18 PM IST
Highlights

இந்திய அணி பவுலிங்கிலும் சிறந்த அணியாக திகழ, பும்ராவுடன் சேர்ந்து இந்த ஸ்பின் ஜோடியும் முக்கிய காரணம். மிடில் ஓவர்களில் எதிரணிகளின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்துவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்திவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் இணைந்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு குல்தீப் - சாஹல் ஜோடி முக்கிய காரணம். 
 

இந்திய அணியில் அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியை ஓவர்டேக் செய்து குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆடிவருகிறது. 

இந்திய அணி பவுலிங்கிலும் சிறந்த அணியாக திகழ, பும்ராவுடன் சேர்ந்து இந்த ஸ்பின் ஜோடியும் முக்கிய காரணம். மிடில் ஓவர்களில் எதிரணிகளின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழ்த்துவதுடன் ரன்களையும் கட்டுப்படுத்திவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் இணைந்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவதற்கு குல்தீப் - சாஹல் ஜோடி முக்கிய காரணம். 

உலக கோப்பையிலும் இந்த ஜோடி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. குல்தீப் - சாஹல் சிறப்பாக செயல்படுவதற்கு நீண்ட அனுபவம் கொண்ட சீனியர் வீரர் தோனியின் அபாரமான ஆலோசனைகளும் முக்கிய காரணம். இதை அவர்களே பல முறை தெரிவித்துள்ளனர். பார்ட் டைம் ஸ்பின்னரான கேதர் ஜாதவ், தான் சிறப்பாக பந்துவீசுவதற்கு தோனியின் ஆலோசனைகள் தான் காரணம் என்று கூறியிருக்கிறார். 

அப்படியிருக்கையில், தோனியின் ஆலோசனைகள் பெரும்பாலும் தவறானதாகவே இருக்கும் என்றும் ஆனால் அதை தோனியிடம் சொல்ல முடியாது என்றும் குல்தீப் யாதவ் தெரிவித்திருந்தார். குல்தீப்பின் ஸ்டேட்மெண்ட் ரசிகர்களை மட்டுமல்லாது வீரர்களையே கூட கோபப்படுத்தியிருக்கும். 

இந்நிலையில், தோனி, ரோஹித், கோலி ஆகியோரின் ஆலோசனைதான் தாங்கள் சிறப்பாக செயல்பட காரணம் என குல்தீப்பின் ஸ்பின் பார்ட்னர் சாஹல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சாஹல், நானும் குல்தீப்பும் பார்ட்னர்ஷிப் போட்டு பந்துவீசுவோம். நான் முதலில் பந்துவீசினால், குல்தீப்பிற்கு ஆடுகளத்தின் தன்மையை எடுத்துரைப்பேன். அவர் முதலில் வீசினால், நான் எப்படி வீச வேண்டும் என்று கூறுவார். தோனியும் ஆலோசனைகளை வழங்கிக்கொண்டே இருப்பார். நாங்கள் எங்களால் செய்ய முடியாத விஷயம் என்று ஒன்று இருப்பதாக நினைப்பதே இல்லை. 

ஆடுகளத்தின் தன்மை எப்படி இருக்கிறது, போகப்போக எப்படி இருக்கும் என்பன போன்ற ஆலோசனைகளை தோனி வழங்குவார். ரோஹித் மற்றும் கோலியும் ஆலோசனைகளை வழங்குவர். அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் மதிப்பு கொடுத்து நடந்துகொள்வர். அவர்களின் செயல்பாடுகளும் ஆலோசனைகளும்தான் எங்களது(சாஹல் - குல்தீப்) வெற்றிக்கு காரணம் என்று சாஹல் தெரிவித்துள்ளார்.

தோனியின் ஆலோசனைகள் பெரும்பாலும் தவறாகத்தான் இருக்கும் என குல்தீப் தெரிவித்திருந்த நிலையில், தோனியின் ஆலோசனைதான் தங்களின் வெற்றிக்கு காரணம் என சாஹல் தெரிவித்துள்ளார். 
 

click me!