TNPL 2025: பாகிஸ்தானை விட மோசமாக ஃபீல்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ்! கடுப்பான அஸ்வின்!

Published : Jun 16, 2025, 12:06 PM IST
TNPL 2025

சுருக்கம்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோசமாக ஃபீல்டிங் செய்ததால் கேப்டன் அஸ்வின் அதிருப்தி அடைந்தார்.

TNPL 2025 Dindigul Dragons Poor Fielding: டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 14ம் தேதி நடந்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்தது. பின்பு விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெறும் 12.3 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் அணி அபார வெற்றி

அந்த அணியின் தொடக்க வீரர் ஷிவம் சிங் 41 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 86 ரன்கள் அடித்து இறுதி வரை களத்தில் இருந்து வெற்றியை உறுதி செய்தார். கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் 29 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 49 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றிருந்தாலும் முதல் இன்னிங்சில் பீல்டிங்போது அந்த அணியின் அடுத்தடுத்து 3 ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் டிராகன்ஸ் மோசமான ஃபீல்டிங்

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணி 20வது ஓவரில் ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20வது ஓவரில் பாந்தர்ஸ் அணி கவர் ஃபீல்டரை நோக்கி ஒரு ஷாட் அடித்தது. கவர்ஸ் பகுதியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த அஸ்வின் அந்த பந்தை பிடித்து நான்-ஸ்ட்ரைக்கர் முனையை நோக்கி ஒரு த்ரோவை வீசினார். அப்போது அந்த த்ரோவை பவுலர் பிடிக்க தவறி விட்டார். பிடித்திருந்தால் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்திருக்கலாம்.

கேப்டன் அஸ்வின் விரக்தி

ஆனாலும் அந்த பந்தை பின்னால் இருந்த பீல்டர் பிடித்து விக்கெட் கீப்பர் நோக்கி த்ரோ செய்தார். ஆனால் விக்கெட் அதை பிடித்து ரன் அவுட் அடிக்க தவறியதால் இரண்டாவது ரன்னை எடுத்தனர். விக்கெட் கீப்பர் மிஸ் செய்த பந்தை மற்றொரு பீல்டர் பிடித்து பவுலலிங் முனையில் த்ரோ செய்தார். ஆனால் அதையும் பவுலர் பிடிக்காமல் விட்டு விட்டார். இதிலும் ஒரு ரன் கிடைத்தது. அடுத்தடுத்து 3 பீல்டிங் மற்றும் ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விட்டதால் கேப்டன் அஸ்வின் கடும் விரக்தியை வெளிப்படுத்தினார்.

பாகிஸ்தானை விட ஃபீல்டிங் மோசம்

அவர் அதிருப்தியை வெளிப்படுத்தும் முகபாவனைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கிரிக்கெட்டில் ஃபீல்டிங் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஃபீல்டிங்கில் சிறப்பாகச் செயல்பட்டால், பாதிப் போட்டியை வெல்ல முடியும் ஒரு முக்கியமான தருணத்தில் ஒரு சிறந்த கேட்ச் எதிராளியின் பக்கத்திலிருந்து போட்டியைப் பறித்த பல நிகழ்வுகள் உள்ளன. ஆனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை விட மோசமாக ஃபீல்டிங் செய்தது ரசிகர்களின் கேலி, கிண்டலை பெற்றுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இதுதான் bazball ஆட்டம்..! இங்கிலாந்துக்கு பாடம் கற்பித்த ஆஸ்திரேலியா! 3 பேர் அதிரடி அரை சதம்!
வார்த்தையை விட்ட விராட் கோலி..! பிசிசிஐ அதிருப்தியால் மனம் மாற்றம்..! நடந்தது என்ன?