மற்ற பயிற்சியாளர்களையும் நாங்கதான் நியமிப்போம்.. அடம்பிடிக்கும் கபில் தேவ்&கோ.. திகைத்து நிற்கும் சிஓஏ

By karthikeyan VFirst Published Aug 18, 2019, 4:48 PM IST
Highlights

தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது மட்டும்தான் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் பணி. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களை தேர்வுக்குழுதான் தேர்வு செய்யும். 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் முடிவடைகிறது. இந்நிலையில், தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

தலைமை பயிற்சியாளரை கபில் தேவ், கெய்க்வாட், சாந்தா ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை நேர்காணல் செய்து தேர்வு செய்தது. 2000 விண்ணப்பங்களில் 6 பேர் ஷார்ட் லிஸ்ட் செய்யப்பட்டனர். அவர்கள் 6 பேரில் ஃபில் சிம்மன்ஸ் தானாகவே போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். 

இதையடுத்து ரவி சாஸ்திரி, டாம் மூடி, மைக் ஹெசன், ராபின் சிங், ராஜ்பூட் ஆகியோரிடம் நேர்காணல் செய்யப்பட்டது. நேர்காணலில் சிறப்பாக செயல்பட்ட சாஸ்திரியே அடுத்த 2 ஆண்டுகளுக்கும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். 

தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது மட்டும்தான் கிரிக்கெட் ஆலோசனைக்குழுவின் பணி. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களை தேர்வுக்குழுதான் தேர்வு செய்யும். ஆனால் அணியின் நலனை கருத்தில்கொண்டு அவர்களை தேர்வு செய்வதிலும் தங்களது கருத்தை கேட்டால் நன்றாக இருக்கும் என கபில் தேவ் தலைமையிலான ஆலோசனைக்குழு பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளது. 

பிசிசிஐ விதிப்படி, தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வது மட்டும்தான் ஆலோசனைக்குழுவின் பணி. எனவே விதியை மீறி கபில் தேவ் தலைமையிலான குழுவின் கோரிக்கையை நிறைவேற்றுவதா அல்லது விதிப்படி செயல்படுவதை உறுதி செய்யும்வகையில், ஆலோசனைக்குழுவின் கோரிக்கையை நிராகரிப்பதா என்பது பிசிசிஐ-யின் நிர்வாகக்குழுவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. 
 

click me!