அனில் கும்ப்ளேவிற்கு அப்புறம் பும்ரா தான்!! 10 வருஷத்துக்கு பின் தரமான சம்பவம்

By karthikeyan VFirst Published May 17, 2019, 3:37 PM IST
Highlights

ஐபிஎல் 12வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனில் நான்காவது முறையாக கோப்பையை வென்று மும்பை அணி சாதனை படைத்தது. 
 

ஐபிஎல் 12வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனில் நான்காவது முறையாக கோப்பையை வென்று மும்பை அணி சாதனை படைத்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு பும்ராவின் பவுலிங்தான் மிக முக்கிய காரணம். பும்ரா அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் முக்கியமான நேரங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு எதிரணிகளின் ரன்களையும் கட்டுப்படுத்தினார். 

மும்பை இந்தியன்ஸ் அணி, வேறு எந்த அணியுடன் மோதினாலும் இரு அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் பும்ராவின் பவுலிங்காகத்தான் இருக்கும். அந்தளவிற்கு அவரது பவுலிங்கை சார்ந்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 

சிஎஸ்கேவிற்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் பும்ரா. கடைசி 4 ஓவர்களில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு வெறும் 42 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதில் இரண்டு ஓவர்களை வீசி வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார் பும்ரா. அதுதான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற காரணமாக அமைந்தது. 

அதனால் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது பும்ராவிற்கு வழங்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் அனில் கும்ப்ளேவிற்கு அடுத்து இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற பவுலர் பும்ரா தான். 2009ல் ஆர்சிபி அணிக்காக ஆடிய கும்ப்ளே, இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதன்பின்னர் 2019ல் பும்ராதான் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற பவுலர். 
 

click me!