1983ல இருந்து நெனச்சது நடந்ததே இல்ல.. ஆனால் இந்த தடவை அப்படி இருக்காது!! உலக கோப்பையின் வெற்றிகரமான கேப்டன் அதிரடி

By karthikeyan VFirst Published May 17, 2019, 2:51 PM IST
Highlights

இதுவரை உலக கோப்பையை ஒருமுறை கூட வென்றிராத இங்கிலாந்து அணிக்கு, இந்த முறை நல்ல வாய்ப்புள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துவருகிறது. 

உலக கோப்பைக்கு இன்னும் 13 நாட்களே உள்ளது. இந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் அனைத்து அணிகளுமே அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த முறை உலக கோப்பை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். 

இதுவரை உலக கோப்பையை ஒருமுறை கூட வென்றிராத இங்கிலாந்து அணிக்கு, இந்த முறை நல்ல வாய்ப்புள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, பேட்டிங், பவுலிங் என அனைத்திலுமே அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துவருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இந்த கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள முதன்மையான அணியாக இங்கிலாந்து பார்க்கப்படுகிறது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளதால், அவற்றையும் குறைத்து மதிப்பிட முடியாது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், இன்னும் பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்பை தெரிவித்துவருகின்றனர். 

பெரும்பாலான ஜாம்பவான்களின் கணிப்பு, இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றுதான் வெல்லும் என்பதுதான். இந்நிலையில், உலக கோப்பை குறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸிற்கு 2 கோப்பையை வென்றுகொடுத்த கிளைவ் லாயிட், எந்த அணி வெல்லும் என்று அனைவரும் கருதுகின்றனரோ அந்த அணி வென்றதேயில்லை. 1992ல் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்றோ 1996 கோப்பையை இலங்கை வெல்லும் என்றோ யாருமே நினைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்லாதது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த முறை இங்கிலாந்து வெல்ல வாய்ப்பு அதிகம். அந்த அணி கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இந்த உலக கோப்பையில் கண்டிப்பாக இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தும் என கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார்.

1992, 1996ல் வேண்டுமானால் பெரும்பாலானோர் கணித்த அணி வெல்லாமல் வேறு அணி வென்றிருக்கலாம். ஆனால் இந்த முறை அனைவரும் கணித்ததை போலவே இங்கிலாந்து வெல்ல வாய்ப்புள்ளது என்பதே இவரது கூற்றின் அர்த்தம். 
 

click me!